Tuesday, July 21, 2020

பொது உடைமை வாதிகளுக்கு மதம் என்பது முற்றிலும் வெறுக்கத்தக்கதாகும்

பொது  உடைமை வாதிகளுக்கு  மதம் என்பது   முற்றிலும்  வெறுக்கத்தக்கதாகும்..

மதத்தின்  மீது  அவர்கள் மிக  ஆழ்ந்த  வெறுப்புக் கொண்டிருப்பதால், பொது உடைமைக்கு  உதவியாக  இருக்கக் கூடிய  மதங்களுக்கும்,  
பொது உடைமைக்கு  உதவியாக  இல்லாத  மதங்களுக்கும்  இடையே  உள்ள  வேறுபாடுகளை  பார்க்க  மறுக்கிறார்கள்..

பொது உடைமை வாதிகள்  கிறிஸ்துவ  மதத்தின்  மீதுள்ள  வெறுப்பை  புத்த  மதத்தின் மீதும்  காட்டுகிறார்கள்..

இந்த  இரண்டு  மதங்களுக்கு  இடையில்  உள்ள  வேறுபாட்டைக் காணும்  பொறுமை  அவர்களிடம்  இல்லை..

கிறிஸ்துவ  மதத்தின்  மீது  பொது உடைமை  வாதிகள்  கூறும்  குற்றச்சாட்டு   இரண்டு  வகையானது...

முதலாவது  குற்றச்சாட்டு  "கிறிஸ்துவ  மதம்  மக்களை  மறு  உலக  மனப்பாண்மை  கொண்டவர்களாக்கி  இந்த  உலகில்  வறுமையை  சகித்துக்  கொள்ளச்  செய்கிறது " என்பதாகும்...

இரண்டாவது  குற்றச்சாட்டு
"விவிலிய  நூலில்  கூறப்படும்  மலைப்  பிரசங்கம்  மக்களின்  வறுமையையும்  பலவீனத்தையும்  மேல்நிலைக்கு  உயர்த்துகிறது..
மேலும்  ஏழைகளும்  பலவீனர்களும்  பரலோகத்தை  அடைவார்கள்"  என  அது  வாக்களிக்கிறது...

இதனாலேயே  "மதம்  மக்களின்  அபினி " என  பொது உடைமை வாதிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்..

புத்தருடைய  போதனைகளில்  இது போன்று  எதுவும்  இல்லை....

ஒவ்வொருவரும்  சட்டப்படி   செல்வம்  சேர்ப்பதோடு,  தமது  உறவினர்களும்  சட்டப்படி  செல்வம்   சேர்க்குமாறு    பார்த்துக்கொள்ள வேண்டும்  என  புத்தர்  கூறுகிறார்..  

      -பாபாசாஹேப்  அம்பேத்கர்.

No comments:

Post a Comment