இந்து மதம் என்பது பிராமணர்களால் பிராமணர்களுக்காக உருவாக்கப் பட்டது.
மற்ற அனைவரும் அவர்களுக்குக் கீழ்தான் எனும்போது அனைவரும் வெளியேறுவதுதான் மரியாதை.
இந்து மதத்தை சேர்ந்த எந்த இரு சாதிகளும் சமமில்லை.
ஒரே சாதிக்குள் உள்ள உட்சாதிகள் ஒன்றுக்கொன்று சமமில்லை.
படிநிலையிலான சமத்துவமின்மை(Graded inequality) என்பதுதான் இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடு.ஆக அந்த மதத்தை கடைபிடிப்பவர்கள் சமத்துவத்தை அங்கே தேடுவது அந்த மதச் சட்டப்படி சட்ட விரோதமாகும்
ஆனால் அது வேறு விஷயம். நம் நிலையை முதலில் பார்ப்போம்.
இந்து மதம் என்ற வீட்டைப் பொறுத்தவரை நாம் வீட்டிற்கு வெளியே நிற்கிறோம்.
உள்ளே பிராமணர்களும் மற்ற உயர்சாதி என்று எண்ணிக்கொண்டிருக்கிற இந்துக்களும் உள்ளனர்.
சூத்திரர்கள் எனப்படும் கீழ்சாதி இந்துக்களுக்குக்கூட திண்ணையில்தான் இந்துமதம் இடமளித்திருக்கிறது.
நமக்கு அந்த வீடு சொந்தமில்லை.ஆனால் நாம் வம்படியாக வீட்டுக்குள்ளேயே சென்றுவிட வேண்டும் என எண்ணுகிறோம்.
திண்ணையில் இருக்கும் சூத்திரர்களுக்குக்கூட வீட்டிற்குள்ளே செல்ல ஆசைதான். ஆனால் வெளியில் நிற்கும் நாமும் உள்ளே வந்துவிடக்கூடாது என்பதிலேயே அவர்கள் அதிக கவனத்துடன் உள்ளனர்.
வீட்டிற்கு வெளியே நிற்பவர்கள்தான் முதலில் வேறு வீடு பார்க்க வேண்டும்.
இங்கு கேள்விகள் தவறாகவே கேட்கப் படுகின்றன.
நாம் ஏன் இந்து மதத்தில் இருக்க வேண்டும் என ஒரு சாராரும்
நாம் ஏன் இந்து மதத்தை விட்டு செல்ல வேண்டும் என ஒரு சாராரும் கேட்கிறார்கள்.
இரு கேள்விகளுமே தவறு என்பதுதான் என் கருத்து.
உண்மையில் கேள்வி என்னவென்றால்
நமக்கு சொந்தமில்லாத ஒரு வீட்டை நமக்கு சொந்தம் என்று நாமே நினைத்துக்கொண்டு அதனுள் நுழைய முயற்சிப்பதும், சமத்துவமின்மையையே தனது கோட்பாடாகக் கொண்ட ஒரு சமுதாயத்தில் நானும் அனைவருக்கும் சமம் என்று கூறி அந்த சமயக் கோட்பாட்டையே மாற்றச் சொல்வதும் எந்த வகையில் நியாயம்.
இதுதான் உண்மையான நேரடியான கேள்வி.
இந்தக் கேள்வியில் உள்ள உண்மைத்தன்மையை யாரேனும் மறுக்க முடியுமா.
வெளியேறி அநீதியை அடித்தளமாக கொன்ட இந்துத்துவ சமுக அமைப்பை பௌத்தம் எனும் பொதுவுடமை தத்துவத்தின் மூலமாக மூடநம்பிக்கை அற்ற முற்போக்கான விஞ்ஞான பூர்வமான சகோதரத்துவ சமத்துவ சமுக அமைப்பாக மாற்றுவோம்
No comments:
Post a Comment