பட்டியல் சாதி இட ஒதுக்கீட்டில் பயன் பெற்று நல்ல நிலையில் உள்ள நமது மக்களின் கவனத்திற்கு :
இந்தியா முழுமையும் மத்திய இட ஒதுக்கீட்டிலும் , மாநில இட ஒதுக்கீட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பயன் பெற்று லட்சக்கணக்காணோர் அரசு பணியிலும், தனியார் பணியிலும் உள்ளனர்.
பலர் மருத்துவர்களாகவும் அரசின் உயர் பதவிகளிலும் உள்ளனர்.
ஆனால் வருந்த தக்க வகையில் இட ஒதுக்கீட்டினாலும் அரசின் நல உதவிதிட்டங்களாலும் பயன்பெற்றுள்ள 'நமது மக்களில்' வெகுசிலரே சமூகத்திற்கு பயன்படுகின்றனர்.
இந்த விடயத்தில் குறிப்பிட தகுந்த ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதை புரிந்து கொள்ள SC இட ஒதுக்கீட்டில் பயன்பெற்று மருத்துவராக அல்லது பேராசிரியராக அல்லது அரசு பணியில் இருக்கும் ஒருவரை கருதுவோம்.
அவருக்கு SC இட ஒதுக்கீட்டில் அரசு MBBS சீட் கொடுத்ததோ அல்லது பேராசியராக ஆக்கியதோ அல்லது அரசு பணி கொடுத்ததோ அவர் நன்றாக படித்தார் , அவர் அறிவாளி என்பதற்கானது அல்ல.
மாறாக அவரை இந்த சமூகத்தின் (SC) ஒரு பிரதிநிதியாக மட்டுமே அரசு தேர்ந்தெடுத்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசியல் அமைப்பு சட்டத்தில் இட ஒதுக்கீட்டை உறுதிபடுத்திய பாபாசாகேப் இதை பற்றி குறிப்பிடும் போது ரிசர்வேசன் என்பது வெறும் பட்டியில் சாதியினருக்கு வழங்கப்படும் பிரதிநிதித்துவ உரிமை மட்டுமே என்கிறார்.
மேலும் இட ஒதுக்கீடு் என்பது ஏழ்மை நிலைக்காகவும் அளிக்கப்பட்டதல்ல. அனைத்து சாதியிலும் ஏழைகள் உள்ளனர். மேலும் SC இட ஒதுக்கீட்டின் மூலம் வறுமையையும் ஒழிக்க இயலாது.
ஏனெனில் மொத்தமுள்ள 25 கோடி பட்டியில் சாதியினரில் 1% க்கும் குறைவான மக்களே இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவித்து இருக்கும் சூழலில் இட ஒதுக்கீட்டை வைத்து வறுமையை ஒழிக்க இயலாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி் போன்ற உண்மையாகும்.
ஆகவே நண்பர்களே
இட ஒதுக்கீட்டில் பயன் பெற்று ஒரளவு நல்ல நிலையில் உள்ளோர் கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதிகளாக மட்டுமே நாம் அங்கு அனுப்ப பட்டுள்ளோம் என்ற உண்மையை நாம் ஒரு போதும் மறக்க கூடாது.
ஆனால் இவ்வாறான நம்மில் பலர் இட ஒதுக்கீட்டில் பயன் பெற்று வாழ்வில் ஓரளவு முன்னேறிய பின்னர் சமூகத்தை மறந்து விடுகின்றனர் என்பது வருந்த தக்க உண்மையாகும்.
எனினும் அண்மைகாலங்களில் பலர் சமூக பணிக்குள்ளும் தங்களை ஈடுபடுத்தி் கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது.
பாபாசாகேப் தன் கடைசி காலத்தில் தான் பெற்று தந்த சலுகைகளால் பயன் பெற்று வாழ்க்கையில் சிறிது ஏற்றம் கண்ட சிலர் என்னை ஏமாற்றி்விட்டனர் என்று கூறி வருத்தப்பபட்டு இருக்கிறார்.
அவர் இன்று உயிரோடு் இருந்திருந்தால் இன்று அதே போன்ற லட்சக்கணக்கானோரை கண்டிருப்பாரோ என்பது கேள்விகுறியாக உள்ளது.
மேலும் இந்து தீண்டாமையை தொடர வைக்கவும்,்தங்கள் உயர்நிலையை தக்க வைக்கவும், இட ஒதுக்கீட்டை ஒழித்து கட்டவும் நமக்கு எதிரான சக்திகள் கடுமையாக வேலை செய்கின்றனர்.
பல இடங்களில் நமது இட ஒதுக்கீடு நீதிமன்றத்தாலும், அரசு நிறுவனங்களாலும் மறைமுகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அரசு நமக்கான உட்கூறு நிதிகளை பெருமளவு ஆண்டு தோறும் குறைத்து வருகிறது.
இந்த சூழலில் படித்து ஒரளவு நல்ல நிலையில் உள்ளோர் இது குறித்து கவலையற்று இருந்தால் இன்னும் இரண்டு் தலைமுறைகளில் நாம் முழுவதும் அனைத்தயும் இழந்து மீண்டும் பாபாசாகேபுக்கு முந்தைய நிலைக்கு தள்ளப்படுவது உறுதி.
கூடுதலாக நம்மில் சிலர் இந்துத்துவ சக்திகளுக்கு பலியாகி "நாங்கள் SC இல்லை" என்றும் சொல்லி வருகின்றனர். அனைத்து சலுகைகளையும் அனுபவித்துவிட்டு்,அனுபவித்து கொண்டு் அவர்கள் இவ்வாறு கூறுவது மிகவும் வருந்ததக்கது ஆகும். நம் வாயாலேயே இட ஒதுக்கீடு வேண்டாம் SC பிரிவிலிருந்து வெளியேறுவோம் என்று சொல்ல வைக்க இந்துக்கள் போட்ட திட்டமே நாமெல்லாம் 'ஆண்ட பரம்பரை' என்று நமக்கும் சாதி் வெறி ஊட்டும் சதியாகும்.
ஆகவே
நண்பர்களே, இடபங்கீட்டில் பிரதிநிதித்துவம் பெற்று நல்ல நிலையில் உள்ளோர் அண்ணல் அம்பேட்கரை வாசிக்க வேண்டும். சமூக அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். நமது மக்களின் உண்மையான பிரதிநிதகளாக வாழ வேண்டும். உங்கள் வாழ்க்கையை முற்றிலும் அர்பணித்துகொள்ளுங்கள் என்று கேட்பது நியாயமற்றது எனும் போது முடிந்த அளவு சமூக அரசியலுக்கான உதவிகளை செய்யுங்கள்.
இதனை நாம் செய்யாவிடில் இந்துத்துவ பார்ப்பனியம் நம்மை மீண்டும் மாடு மேய்க்கும் வேலையில் விரைவில் அமர்த்திவிடும் என்பது உறுதி.
ஜெய் பீம்.
No comments:
Post a Comment