புத்தரை நோக்கி அவர் சீடர் போத்தபாதர் எழுப்பிய கேள்விகள்.
(1) இந்த உலகம் நிலையற்றதா?
(2)இந்த உலகம் எல்லையுடையதா?
(3) இந்த உலகம் எல்லையற்றதா?
(4) ஆன்மாவும் உடலும் ஒன்றா?
(5) ஆன்மாவும் உடலும் வேறுவேறா?
(6) உண்மையை உணர்ந்தவன் மரணத்துக்குப் பின்னும் வாழ்கிறானா?
(7) அவன் மரணத்துக்குப்பின் வாழ்வதில்லையா?
(8) மரணத்துக்குப்பின் அவன் வாழவும் செய்கிறான் வாழாமலுமிருக்கிறான் எனலாமா?
(9) மரணத்துக்குப் பின் அவன் வாழ்வதுமில்லை வாழாமலுமில்லை எனலாமா?
இந்த வினாக்கள் ஒவ்வொன்றிற்கும்,உயர்வெய்திய புத்தர் ஒரே பதிலையே கூறிவந்தார்.
புத்தர்:
"போததபாதரே, இவற்றைப்பற்றி நான் கருத்து எதுவும் கூறுவதில்லை."
போத்த பாதர்:
"மேன்மை தங்கிய புத்தர் இதைப்பற்றி ஏன் எக்கருத்தும் கூறுவதில்லை?"
புத்தர்:
"ஏனென்றால் இவ்வினாவால் எந்தப் பயனும் இல்லை,
இவ்வினா தம்மத்தோடு தொடர்புடையவை அல்ல, நல்லொழுக்கத்திற்கோ பற்றற்ற தன்மைக்கோ,
அவா அறுத்தலுக்கோ,உள்ளத் தூய்மைக்கோ, சமநிலைக்கோ,
உண்மை அறிவிற்கோ, உள்நோக்குடைய மிக உயரிய நற்பாதைக்கோ, நிப்பானத்துக்கோ இந்த வினாக்கள் பயன்படுவதில்லை.
எனவே இவ்வினாக்களுக்கு நான் விடைதேடுவதில்லை."
போத்த பாதர்:
அப்படியாயின் மேன்மை தங்கிய புத்தராகிய தாங்கள் எதைத்தான் பொருட்படுத்துகின்றீர்கள்?
புத்தர்:
"போத்துபாதுரே! துக்கம் என்பது என்னவென்றும், துக்கத்தின் தொடக்கம் எதுவென்றும், துக்க-ஒழிப்பு எனில் யாதென்றும்,துக்கத்தை ஒழிக்கும் வழி இன்னதென்றும் நான் விளக்கியிருக்கிறேன்."
போத்தபாதர்:
"இது பற்றி மேன்மை தங்கிய புத்தராகிய தாங்கள் விளக்குவது ஏன்?"
புத்தர்:
ஏனெனில், துக்கம் பற்றிய இவ்வினாக்கள் பயனுடையவை, தம்மத்தோடு தொடர்புடையவை,நல்லொழுக்கத்தின் பற்றறுத்தலின், அவா அறுத்தலின், அமைதியின் உள்ளத் தூய்மையின்,சமநிலையின், உண்மை அறவின், உள்ளுணர்வின், உயர்நிலையின், நிப்பான மார்க்கத்தின் தொடக்கங்களோடு தொடர்புடையவவை. எனவே, போத்தபாதரே,இவை பற்றியே நான் விளக்குகிறேன்.
மதத்தின் அடிப்படை கோட்பாடுகள் தம்மத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் அல்ல என்பதை இந்த உரையாடல் மிகத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது.
மதமும் தம்மமும் விலகிநிற்கும் இருவேறு துருவங்கள்.
மதத்தின் நோக்கம் உலகத்தின் தோற்றத்தை விளக்குவது,
தம்மத்தின் நோக்கமோ உலகைப் புனரமைப்பது.
தம்மத்தில் ஒழுக்கத்தின் இடம் யாது.?
எளிய விடை இதுதான்,
தம்மம் தான் ஒழுக்கம்: ஒழுக்கம் தான் தம்மம்.
வேறுவகையில் சொல்வதானால் மதத்தில் கடவுளுக்கு என்ன இடம் வழங்கப்படுகிறதோ அந்த இடம் தம்மத்தில் ஒழுக்கத்திற்கு வழங்கப்படுகின்றது.
தம்மத்தில் கடவுளுக்கு இடம் இல்லை.
தம்மத்தில் பிரார்த்தனைக்கோ, புனித யாத்திரைக்கோ, சடங்குகளுக்கோ, பூசைக்கோ தொழுகைக்கோ, பலியாகத்திற்கோ இடமேயில்லை.
தம்மத்தின் சாரம் ஒழுக்கம் தான், அது இல்லாமல் தம்மமே இல்லை.
மனிதன் மனிதனை நேசிக்க வேண்டிய அவசியத்தின் நேரடி விளைவாக தம்மத்தின் ஒழுக்கம் தோன்றுகின்றது.
கடவுளின் அங்கீகரிப்பு தம்ம ஒழுக்கத்திற்கு தேவையில்லை.
மனிதன் ஒழுக்கத்தோடு நடக்க வேண்டுமென்பது கடவளை மகிழ்விக்க என்று மதங்கள் கூறுவது போல் தம்மம் போதிக்கவில்லை.
மனிதன் மனிதனை நேசிக்க வேண்டியிருப்பதால் அவனுடைய நன்மைக்காகவே மனிதன் ஒழுக்கமாய் நடந்தாக வேண்டும்.
இதுவே தம்மம்.
-புத்தர்.
No comments:
Post a Comment