இந்தியாவின் பட்டியிலின மக்கள் மதமாறுவது,பௌத்தம் திரும்புவது தங்கள் பலத்தை உயர்த்தி கொள்ள தான்.
இந்து மதத்தில் பலமற்று ஆதரவற்று இருக்கும் அவர்களுக்கு சமூக பலத்தை வழங்குவதே (social strength) அதன் உண்மையான நோக்கம்.
மாறாக தியானம் செய்வதோ, அல்லது வாழ்க்கையின் நோக்கம் குறித்து ஆன்மீக ஆராய்சி செய்யவோ அல்ல.
இந்துக்கள் அவர்களது மத அடிப்படையில், மதம் கொடுக்கும் தைரியத்தில் தலித் மக்கள் மீது வன்முறையை ஏவுகின்றனர்.
எந்த பகுதியில் தலித்துகள் தாக்கப்பட்டாலும் அதனை இந்தியாவில் உள்ள அனைத்து இந்துக்களும் நியாயமென்று கருதுகின்றனர்.
யாரும் பட்டியிலின மக்களுக்கு ஆதரவாக இருப்பதில்லை.
இது தான் அவர்களின் மதம் அவர்களுக்கு கொடுக்கும் பலம் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் மதமென்ற ஆயுதத்தை கையில் எடுத்திருக்கும் போது நமக்கு தேவையும் அதே ஆயுதம் தான்.
இதனை புரிந்து கொள்ள கீழ் வெண்மணியில் 44 இந்து பட்டியிலின மக்களை சாதி்இந்துக்கள் உயிரோடு் எரித்து கொன்ற சம்பவத்தை நினைவு கூறுவோம்.இதில் குற்றவாளியை இந்து நீதிமன்றம் விடுவித்தது.
இதே பிரச்சினையில் ஒரு வேளை 44 புத்திஸ்டுகளை, இந்துக்கள் எரித்து கொன்றிருந்தால் அந்த பிரச்சினை எவ்வளவு பெரிய பிரச்சினையாக ஆகி இருக்கும் ??
அதற்காக சர்வதேச அளவில் இன்றும் இந்திய அரசு தலைகுனிந்து நிற்க நேரிட்டு இருக்கும். ஆனால் அந்த பிரச்சினை ஒரு இந்து உட்சாதி குடும்ப சண்டை என்ற அளவில் மாநிலத்தை கூட தாண்டவில்லை என்பது ஏன் என்று சிந்திக்க தக்கது.
பௌத்தம் இலங்கையில் வன்முனை செய்தது என்று கூறி நமக்கு அறிவுரை செய்வோர் நியாயமாக ஆண்டுக்கு இரண்டு் லட்சம் வன்முறையை நமக்கு எதிராக செய்யும் இந்து மதத்திற்கும் எதிராக வாய்திறப்பதில்லை என்பது அயோக்கியதனத்தின் உச்சமாகும்.
No comments:
Post a Comment