பௌத்தம் தேவை இல்லை என்று சொல்லும் முற்போக்காளர்கள்....
கல்யாணம், புது மனை புகு விழா போன்ற சடங்குகளை பிராமணர்களை வைத்து செய்யாதீர்கள்..
பிராமணர்களை வைத்து கணபதி யாகம் போன்றவைகள் செய்யாதீர்கள்..
இந்து கோவிலுக்கு உங்கள் சந்ததியினரை அழைத்து செல்லாதீர்கள்..
பூஜை அறையை தூக்கி எறியுங்கள்...
சாமி படங்களை வீட்டில் இருந்தும், உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் மனங்களில் இருந்தும் தூக்கி எறியுங்கள்..
எல்லாரும் சான்றிதழில் நாத்திகன் என்று பதிந்து கொள்ளுங்கள்..
அப்படி முடியாது..
ஒரு வேளை எந்த மதமும் தேவை இல்லை என குறிப்பிட்டால்
சாதி பெயரை குறிப்பிட முடியாது...
உன் அப்பன் ,பாட்டன்,முப்பாட்டன்,
உன் தலைமுறையையே பல நூறு வருடங்களாக அடிமைப்படுத்தி வைத்திருக்கும்,
மேலும் நம் சந்ததியினரை
நீட் தேர்வு, குலகல்வி, இடஒதுக்கீடு நீக்கம் மூலம்
அடிமைப்படுத்த துடிக்கும் ,
இந்துதுவத்தை அடிப்படைகொள்கையாக கொண்ட....
இந்து மதத்தை கொஞ்சம் கூட வெட்கம், மானம்,சூடு, சொரணை இல்லாமல் ,
எதற்கு "இந்து" என சான்றிதழில் குறிப்பிட்டுள்ளீர்கள்...???
முதலில் அதை தூக்கி எறியுங்கள்
நாம் பௌத்தம் மாறுவது முதலில் நம்மை இழிவுபடுத்தி தீண்டதகாதவனாய் ஒடுக்கிய,
இந்து மதத்தை எதிர்க்கும் ஒரு புரட்சி....
மேலும் இந்துத்துவதை தகர்க்கும் முதல் முயற்சி. பெயரை குறிப்பிடாவிட்டால் சேரியில் உள்ள பட்டியல் இன மக்களுக்கு இட ஒதுக்கீடும் கிடைக்காது...
இது தான் நீங்கள் சொல்லும் தீர்வா???
ஏதோ ஒரு மதம் சான்றிதழில் குறிப்பிட்டாக வேண்டும்..
அது ஏன் அண்ணல் சொன்ன பௌத்தம் என்று குறிப்பிட கூடாது..
மேலும் உண்மையில் நாம் பௌத்தர்கள் தானே..
நம்மை அடிமை படுத்தி வைத்த பிராமண உருவாக்கிய இந்து மதத்தை ஏன் குறிப்பிட வேண்டும்???
மேலும் நாம் இந்துக்கள் அல்ல பட்டியல் இனத்தவர் என்று சொல்லி தான் இட ஒதுக்கீடு பெறப்பட்டது...
வெறும் சான்றிதழில் இந்து என இருப்பது கூட நேரடியாகவே இந்துவதித்திற்கு மன பலத்தை கொடுக்கிறது..
அந்த மன பலம் தான் நம்மை,
சாதி இந்துக்கள் ஒடுக்குவதற்கு காரணமும் கூட...
No comments:
Post a Comment