மகிந்தர் இலங்கையில் பௌத்த சமயத்தைப் பரப்பியபோது இலங்கை அரசரின் மாமனாராகிய அரிட்டர் என்பவர் பௌத்தசமயத்தைத் தழுவியதோடு பௌத்தத் துறவியாகவும் மாறினார்.
இலங்கையில் பௌத்த சமயம் பரவ அரிட்டர் மகிந்தருக்குப் பெருமளவு உதவினார் என்று மகாவம்சம் குறிப்பிடுகிறது.
பின்னர்இவர்கள் இருவரும் தமிழ்நாட்டிற்கு வந்து பௌத்த சமயத்தைப் பரப்பியிருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இப்படிக் குறிப்பிடச் சான்று ஏதேனும் இருக்கவேண்டுமல்லவா?
தமிழகத்தில் மதுரை மாநகரம் பழம்பெரும் மூதுராகும்.அங்குச் சில குகைகள் காணப்படுகின்றன. அவை பௌத்தத் துறவிகள் படுத்து உறங்குவதற்காகப் பாறையில் செதுக்கப்பட்டபடுக்கைகளாகும்.
அவற்றுக்குக் கீழ் சில எழுத்துகள் காணப்படுகின்றன. குகைகள் பௌத்தத் துறவிகள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட குகைகள் போலவே உள்ளன.
குகைகளில் காணப்படும் எழுத்துகள் அசோகர் காலத்துக் கல்வெட்டுச் சாசனங்களில் காணப்படும் பிராமி எழுத்துகளை ஒத்திருப்பதால் அவை கி.மு.3-ஆம் நூற்றாண்டில்அமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்று ஆராய்ச்சி வல்லுநர் கூறுகின்றனர்
.தவிர, பாண்டிய நாட்டுக் குகைகளில் ஒன்று அரிட்டா பட்டி என்னும் கிராமத்துக்கருகில் உள்ளது.
இந்தப் பெயர் மகிந்தருக்கு உதவியாக இருந்த அரிட்டர் என்னும் துறவியை நினைவூட்டுகிறது.
ஒருவேளை அவர் தம் சீடர்களுடன் அங்கு வாழ்ந்திருக்கக் கூடும். அதனால் அந்த ஊர் அரிட்டாபட்டி என்று வழங்கியிருக்கலாம்...
No comments:
Post a Comment