Tuesday, July 21, 2020

இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் பௌத்தம் தானே இருக்கின்றது. அங்கெல்லாமும் படுகொலைகள் நிகழ்கின்றனவே?

கேள்வி : 

இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் பௌத்தம் தானே இருக்கின்றது.  அங்கெல்லாமும் படுகொலைகள் நிகழ்கின்றனவே?

பதில் : 

பௌத்தம் படுகொலைகளை நிராகரிக்கின்றது.  அதன் பஞ்சசீலங்களில் முதல் சீலமான "பானாதி பாத வீரமனி சிக்கப்பதங் சமாதியாமி" என்பதே "உயிர்கொலைகளை நிராகரிக்கும் சீலத்தை உவந்தேற்க்கின்றேன்" என்பதே.  

சித்தார்த்தர் வீட்டைத் துறந்து துறவு பூண்டதற்குக் காரணமே சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் இடையேயான போரைத் தடுத்து நிறுத்தவே.  

ஆக, அரசியல் மற்றும் இன்னபிற காரணங்களுக்காக நடந்தேறும் படுகொலைகளை பௌத்தத்தின் மீது சாற்றுவது பௌத்தத்தைப் பற்றி அறியாதவர்களோ அல்லது அதன் மீது பழியைச் சுமத்தவேண்டும் என்று எண்ணுவோர்களுடையக் கபடமே என்றால் மிகையில்லை.

இஸ்லாமுக்கு குர்-ஆனும், கிருத்துவத்திற்கு விவிலியமும் போன்று ஒரு "புனித நூல்" மற்றும் பொதுப்பெயர் வேண்டும் என்பதற்காக "இந்து" என்றும், "கீதை" என்றும் போன்ற நூற்றாண்டில் தெரிவு செய்யப்பட்டது.

அந்த பகவத் கீதையே கொலையை, போரை ஊக்குவிக்கும் ஒரு பாடலே.  

ஆக, போரை, படுகொலைகளை நிராகரிக்கும்,பௌத்தத்தின் மீது போரை, படுகொலைகளை ஊக்குவிக்கும் பார்ப்பனீயத்தினைப் பின்பற்றுவோர் குற்றம் கூறுவது வேடிக்கையான ஒன்றே.  

திருஞான சம்பந்தன் போன்றவர்கள் பௌத்தர்கள் மீது வன்கொடுமைகளை நிகழ்த்திய, அதனைப் பாடியவர்கள்.  இவர்களைக் கொண்டாடுவோர் பௌத்தத்தைக் குறை கூற "இலங்கை, பர்மா" என்பது, தங்களை யோக்கியர்கள் என்று நிறுவிக்கொள்ளவோ அல்லது, "அது மட்டும் யோக்கியமா" என்று சேரைப் பூசும் செயலேயன்றி வேறொன்றுமில்லை.

இவ்வாறு பௌத்தத்தின் மீது வீண்பழி கூறுவோரைக் கூர்ந்து கவனியுங்கள்.  

பூர்வ பௌத்தர்களான இன்றைய பட்டியலின மக்கள் மீது, பார்ப்பனீயவாதிகள் நிகழ்த்தும் வன்கொடுமைகளை கண்டுகொள்ளாமல் செல்பவர்களாகவே இருப்பர்.

No comments:

Post a Comment