Wednesday, July 22, 2020

தேவாரம் - ஞான சம்பந்தர் கற்பழிக்க சொன்னாரா?

தேவாரம் - ஞான சம்பந்தர் கற்பழிக்க சொன்னாரா?

தேவராத்திலும், நாலாயிர திவ்ய பிரபந்தத்திலும் பிற மத மற்றும் சமய  துவேஷம் இல்லாமல் இல்லை. 

சைவ வைணவ சண்டை ஊர் அறிந்தது.

தேவாரம் பாடப்பட்ட காலத்தில் சைவ சமண உரசல்கள் உச்சத்தில் இருந்தது.

அரசனின் ஆதரவோடு ஒரு சமயத் தலைவர்கள் மற்ற சமயத் தலைவர்களை கண்டித்ததும் தண்டித்ததும் உண்டு.

இங்கு, சைவ சமயத்தை சேர்ந்த ஞான சம்பந்தர் சமண மதத்தவர்களை வென்ற பின், அம்மத பெண்களை கற்பழிக்க இறைவன் அருள் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறார்.....

குழப்பமாய் இருக்கிறதா ?

படித்துப் பாருங்கள்.

பாடல்: 
மண்ண கத்திலும் வானிலு மெங்குமாம்
திண்ண கத்திரு வாலவா யாயருள்
பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே.    

சீர் பிரித்த பின்: 

மண் அகத்திலும் வானிலும் எங்குமாம்
திண் அகத்து திரு ஆலவாய் அருள்
பெண் அகத்து எழில் சாக்கியப் பேய் அமண் 
தெண்ணர் கற்பழிக்கத் திரு உள்ளமே

பொருள்:

மண் அகத்திலும் = மண்ணிலும், இந்த பூமியிலும்

வானிலும் = தேவர் உலகிலும்,

எங்குமாம் = வேறு எல்லா இடத்திலும்

திண் அகத்து = திண்மையான மதில்களை கொண்ட

திரு ஆலவாய் = மதுரை (திரு + வால் + வாய்)

அருள் = அருள் செய்ய வேண்டும்

பெண் அகத்து எழில் = பெண்களிடம் உள்ள எழில்( அழகு)

சாக்கியப் பேய் அமண் = சாக்கியரோடு(புத்தர்) கூடிய பேய் போன்ற சமண(அமணர்) சமயத்தை சேர்ந்த

தெண்ணர் = திண்ணர், திண்மையான உடல் உள்ளவர்கள், குண்டர்கள், 

கற்பழிக்கத் திரு உள்ளமே = கற்பை அழிக்க திருவுள்ளம் அருள வேண்டும். 

இது தான் எந்த ஞானமும் அற்ற சம்பந்தனின் அருவருக்கத்தக்க (அருகதரை வெறுக்கும்) உள்ளம்.....

No comments:

Post a Comment