பொதுவாக எல்லா தளங்களிலும் நான் எதிர்கொள்ளும் பிரச்சினை இது தான்...
ஏன் எப்போதுமே இந்து மத எதிர்ப்பு, பௌத்தம்,அம்பேத்கரியம்,பெரியாரியம் போன்ற கருத்துக்களையே தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வருகிறாய்???
இது பலருக்கும் எரிச்சலை உண்டாக்கும்.
Please avoid .
அனைவருக்கும் சென்றடைய வேண்டிய செய்தியை பொது தளத்தில் தானே பகிரவேண்டும்.
ஒன்று மட்டும் சொல்கிறேன் புத்தர்,அண்ணல்.அம்பேத்கர், பெரியார் இன்னும் பலர், தன் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நொடியையும் கூட வீணாக்காமல் பார்ப்பனீயத்திற்கு எதிராக போராடியதால் தான் ,
இன்று உங்களிடத்தில் கல்வி,பட்டம்,பொருளாதாரம்,சுயமரியாதை, கைகளில் ஸ்மார்ட் போன் இதெல்லாம் இன்று கிடைத்திருக்கிறது.
அவர்கள் போராடாமல், இன்று இது சாத்தியமல்ல.
எத்தனை ஆயிரம் பிற்போக்கான மதவாதி மறைந்தாலும் கோடிக்கணக்கான மதவாதிகள் மீண்டும் பிறந்து விடுகிறார்கள்.
ஆனால் பெரியாரோ,அம்பேத்கரோ மறைந்தால் மீண்டும் அவர்கள் போல் யாரும் மீண்டும் பிறப்பதில்லை.
பார்பனீயத்திற்கு எதிரான போராட்டம் என்பது மிக நீண்ட நெடுங்கால போராட்டம் ஓரிரு நாளில் முடிந்துவிடாது. இது ஒரு தொடர்ச்சியான போராட்டம்.
இதற்கு தொடர்ச்சியான விழிப்புணர்வு அளிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
இப்போது இந்து மதபக்தி மற்றும் சாதி எனும் பார்ப்பனீய மாய வலையில் அனைவரும் சிக்கியுள்ளனர்.
நம்மை வீழ்த்தியதே இவைதான் என்று யாருக்கும் புரியவுமில்லை ,புரிந்துகொள்ள முயற்சிக்கவும் இல்லை என்பது தான் வேதனையானது.
மேலும் பார்ப்பனீயம்,
நம் சுதந்திரம்,நிலம்,கல்வி,வேலைவாய்ப்பு,
சுயமரியாதை, அனைத்தையும் நம்மை அறியாமலே பறித்துக்கொள்ளும் வேலையை மிக தீவிரமாக செய்து கொண்டு வருகிறது.
இங்கு அனைவருமே அம்பேத்கராக,பெரியாராக மாறவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.
ஆனால் யாரும் அவர்கள் முன்மொழிந்த தீர்வை படிப்பதுமில்லை,படிக்க எண்ணுவதுமில்லை.
தினமும் அவர்கள் கூறிய கருத்துக்களை பகிர்ந்தால் கூட படித்து புரிந்துகொள்ளாமல்,
எதற்கு இந்த செய்திகள் எல்லாம் இவை தேவையில்லை என்ற நோக்கில் என்னை வெறுக்கிறார்கள்.
ஒவ்வொரு குடும்பமும் பகுத்தறிவு,பார்ப்பனீய எதிர்ப்பு உணர்வு பெறும்போது தான் இந்த நாடும்,மக்களும்
சமத்துவம் பெறுவார்கள்,உண்மையான விடுதலை பெறுவார்கள்.
இல்லையெனில் நம் சந்ததியினர் மற்றும் நம் சமுதாயம் மீண்டும் பார்ப்பனீய சூழ்ச்சியில் சிக்கி அடிப்படை உரிமைகளை இழந்து சீரழிந்து போவார்கள்.
இன்றைய சூழ்நிலையில் நீர்,உணவு ,உடை எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் சுயமரியாதை அதற்கு,
அம்பேத்கர் மற்றும் பெரியாரை (சு)வாசிப்பது தினமும் அவசியம்.
கற்பி...
No comments:
Post a Comment