நாத்திகம் என்பது எவ்வகையிலும் பட்டியிலின மக்களுக்கு பயன்படாது. பல மதங்களை சார்ந்த நாத்திகர்கள் இந்தியாவில் உள்ளனர்.
அவர்கள் அந்த அந்த மதத்தை சார்ந்தவர்களவே அறியப்படுகின்றனர். பட்டியிலின மனிதன் ஒருவன் தன்னை நாத்திகராக அடையாளப்படுத்தி்கொள்வது அவர் தன்னை ஒரு இந்து என்றே சமூகத்தில் அடையாளப்படுத்தி கொள்வதாகும்.
அவர் தீண்டாமையிலிருந்து அதன் மூலம் ஒரு போதும் தப்ப இயலாது.
மேலும் கடவுள் இல்லை என்பதை பரப்புவது முக்கியமா அல்லது தீண்டாமையிலிருந்து விடுபடுவது முக்கியமா எனில் தீண்டாமையிலிருந்து விடுபடுவதே ஒவ்வொரு பூர்வீக பௌத்தருக்கும் முக்கியமான ஒன்றாகும் .
அதற்கு இந்து கலாச்சாரத்திலிருந்து விடுபட்டு சொந்த கலாச்சாரத்தை கட்டமைப்பது முக்கியமாகும். தலித் மக்கள் முழுவதும் இந்து மதத்திலிருந்து வெளியேறும் போது தங்களுக்கு கீழ் யாரும் இல்லாமையால் பிற்படுத்தப்பட்டவர்கள் தங்களுக்கு மேல் யாரும் இருக்க இயலாது என்று பார்பன உயர்வை மறுப்பார்கள்.
இது ஒன்றே சாதியை அழித்தொழிக்க ஒரே வழி.
மாறாக இந்துவாக இருந்து கொண்டே அதனை சீர்படுத்த முயல்வது தலித் மக்களுக்கு தேவையற்ற ஒன்றாகும்.
உலகில் நாத்திகர்கள் அதிகமாக உள்ளது ஸ்கேண்டிநேவியன் நாடுகளில் ஆகும்.
இங்கு குறிப்பிட தக்க விடயம் அங்கெல்லாம் யாரும் நாத்திகத்தை பரப்பவில்லை என்பதும் அதற்கென ஏதும் அமைப்புகள் அங்கு இயங்கவில்லை என்பதும் ஆகும்.
அங்கு கடவுள் மறுப்பு தானாக மலர்ந்துள்ளது. ஏனெனில் மனித வளர்ச்சி குறியீட்டில் (human developmental index) அந்த நாடுகள் முதல் பத்து இடத்தில் உள்ளன.
மனிதனின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகி பிரச்சினையற்ற சமூகம் உருவாகும் போது கடவுள் அங்கு தானாக தேவையில்லாமல் போய்விட்டார்
ஆனால் இதற்கு மாறாக இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் பின்தங்கிய நாடுகளிலும் கடவுள் மறுப்பை திணிப்பது பிரச்சாரம் செய்வது தோல்வியில் தான் முடியும்.
சில தலைமுறைகளாக பெரியாரிய அமைப்பில் உள்ள எங்கள் அமைப்பை சார்ந்த மருத்துவர் ஒருவர் புதிய தலைமுறைகள் வரும் போதும் குடும்பத்தில் திருமணம் நடந்து புதிய நபர்கள் வீட்டுக்கு வரும் போதும் இந்து கடவுள்கள் தானாக தங்கள் வீட்டுக்குள் வந்து விட்டதாகவும் அதனை தங்களால் தடுக்க இயலவில்லை என்றும் எங்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
இதற்கு காரணம் நாத்திகம் என்பது வெறும் எதிர்ப்பு நிலை ஆகும்.
அதற்கென ஏதும் பண்பாடு இல்லை. மாறாக இந்து பண்பாடுகளை எதிர்ப்பதில் அது முடிவடைந்து விடுகிறது.
ஆனால் மனிதனின் இயல்பான தேவை குழுவாக உணர்வதாகும்.
அவர்களுக்கு பண்பாடு , கலாச்சார நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் இயல்பாக தேவைப்படுகிறது.
அண்ணல் அம்பேட்கர் மனிதனுக்கு மதம் தேவை என்று ஒரே வரியில் இதனை பிரகடணபடுத்துகிறார்.
மேலும் அந்த மதம் மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் வாழ்க்கையை சுலபமாக்க வேண்டும் என்றும் கூறுகிறார் .
இவ்வாறான காரணத்தினால் பாபாசாகேப் புத்த மதம் தழுவினார். அனைத்து பட்டியின மக்களையும் புத்த மதம் தழுவ கோரினார்.
No comments:
Post a Comment