Suresh Bhim
கேள்வி:
என் குடும்பம் மற்றும் என் சேரி மக்களுடன் நாங்கள் பௌத்தம் தழுவினால் அப்படி என்ன நடந்துவிடப்போகிறது?
என்னை சாதி இந்து அப்போதும் என் சாதிப்பெயரை சொல்லித்தானே திட்டுவான்? அசிங்கமாகத்தானே பார்ப்பான்?
எப்போதும்போலத்தானே தாக்குவான்?
பதில்:
நீங்கள் பெருந்திரளாக பௌத்தம் ஏற்றவுடன் முதலில் தன்னிலை விடுதலை அடைவீர்கள்.
பிறகு பௌத்த கலாச்சாரத்தை பின்பற்ற தொடங்குவீர்கள்
இது சாதி இந்துக்கள் கலாச்சாரத்தை விட வழிபாட்டு முறையை விட நிச்சயமாக சிறந்ததாக இருக்கும்.
நம் கலாச்சாரம், ஒற்றுமை போன்றவற்றை கண்டால் சாதி இந்துக்களுக்கே ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.
அவர்களுடைய வழிபாட்டிலோ கோவிலிலோ நீங்கள் உரிமைக்கோர போவதில்லை, கோவில் தேர் இழுத்தல், ஜல்லிக்கட்டு போன்றவைகளுக்காக அவர்களை நாட வேண்டிய தேவை ஏற்படாது.
நீங்கள் உங்களுக்காக ஒரு விகார், உங்களை வழி நடத்த ஒரு குரு போன்றவற்றை பெறுவதோடு அவருடைய ஆலோசனைகளை பெறுவீர்கள்.(அவர் உலகளாவிய பௌத்தர்களின் தொடர்பை பெற்றிருப்பவர்)
நீங்கள் இந்து மதத்தில் இருக்கும்வரைதான் கீழ்சாதி அவர்கள் மேல்சாதி.
வெளியேறியதும் நீங்கள் புத்திஸ்ட் அவர் இந்து.
நாம் இழி நிலையில் இங்கேயே இருப்பதனால்தான் அவர்கள் நம் சாதிப்பேரை சொல்லி திட்டுகிறார்கள்.
நீங்கள் இந்து மதத்தில் உள்ள கீழ்சாதியிலிருந்து விடுதலை அடைந்து விட்டேன் என்றதுமே உளவியல் ரீதியாக பாதி பலம் கூடி விடும்.
நீங்கள் அவர்களிடையே வழிபாடு மற்றும் மதம் சார்ந்த எந்த உரிமையையும் கேட்டு போராடப்போவதில்லை,
நேரத்தை வீணடிக்கப்போவதில்லை, பணத்தை வீணடிக்கப்போவதில்லை.
நேரம்,பணம் இவற்றை உங்களுடைய படிப்பு, வேலை,பணி போன்ற உங்களின் அனைத்து மேம்பாட்டிற்காகவும் பயன்படுத்தி உயரப்போகிறீர்கள்.
நீங்கள் எந்த வகையிலும் அவர்களுக்கு கீழானவர்களாக இருக்க வாய்ப்பில்லை.
அவர்கள் உங்களை அசிங்கமானவர்களாகவும் பார்க்க வாய்ப்பில்லை.
நீங்கள் உங்களுடன் இருக்கும் சொந்த பலத்தை அடைவதுடன் உலகளாவிய பௌத்தர்களின் உதவிகளையும் பெறுவீர்கள்.
தலித்தாக இருந்த உங்களை அலட்சியமாக தாக்கியது போல் புத்திஸ்ட்டாக இருக்கும் உங்களை அவர்களால் தாக்கிட முடியாது.
உண்மை என்னவென்றால் மற்ற மதத்தினரை தாக்கும் அளவிற்கு இவர்களுக்கு தைரியம் கிடையாது.
பௌத்த நாடுகளுக்கு இந்திய அரசாங்கம் பதில் சொல்லி
ஆக வேண்டும்.
ஊர்,வட்டம்,மாநிலம், என சுருங்கியிருந்த உங்கள் பிரச்சனை சர்வதேச பிரச்சனையாக மாறிவிடும்..
இந்தியாவில் தற்போது உள்ள முஸ்லிம்கள் 75% பேர் SC and OBC ஆக இருந்து மதம் மாறியவர்கள் தான்.
அவர்களுக்கு இப்போது தீண்டாமை இழிவு உள்ளதா?
அவர்களை இந்துக்கள் தாழ்த்தப்பட்டவாகளாகவா பார்க்கிறார்கள்?
வேற்று மதத்தினராகத்தானே பார்க்கிறார்கள்?
இந்த நிலை அவர்களுக்கு எப்படி வந்தது?
ஆரம்பத்தில் அவர்களும் மதமாற்றம் செய்துகொண்டவர்களாகத்தான் தெரிந்திருப்பார்கள்.
பல தலைமுறைகள் தாண்டியதும் அது மறைந்து விடுகிறது.
அது போல, இன்று நாம் புத்திஸ்ட் ஆனால், நம் குழந்தைகள் இந்த தாழ்த்தப்பட்ட இனம் என்ற அடையாளத்திலிருந்து விடுபட்டுவிடுவார்கள்.
No comments:
Post a Comment