பெருந்திரளாக மக்கள் பௌத்த ஏற்கும் போது கிடைக்கும் சமூக மாற்றங்கள்:
முதலில் அண்ணல் அம்பேத்கர் வழியில்
பௌத்தம் ஏற்பவர்கள் அனைவரும் ,சாதி இழிவு நீங்கவும், சுயமரியாதை பெறவும் தான்.
எனவே அவர்களுக்கு சாதி பற்று இருக்காது.
சாதி பற்று உள்ளவர்கள் பௌத்தம் ஏற்கவும் மாட்டார்கள்.
நாம் கோயிலுக்குள் செல்ல போவதில்லை.
அவர்களின் தெருக்களில் புத்தர் சிலை தான் இருக்கும்.
அவர்களின் தெருக்களின் பெயர் புத்தர் தெரு என மாற்றும் பெறும்.
சடங்குகளை பௌத்த முறைப்படி புத்தரின் தம்மத்தின் அடிப்படையில் தான் நடைபெறும்.
*மூடநம்பிக்கை அடிப்படையில் அல்ல.
பட்டியல் இன மக்களிடையேயும் மற்றும் மற்ற முற்போக்கு சாதியினர் பௌத்தம் ஏற்பதால் சாதிகள் மறையும்.
பௌத்தம் ஏற்ற பட்டியலின மக்களிடையே கலப்பு திருமணங்கள் நிகழும்,
நம்மிடையே பௌத்தர்கள் என்ற ஒற்றுமை ஏற்படுத்தி அமைப்பாக முடியும்.
இந்து மதத்தினரின் சாதி வெறி தாக்குதல் குறையும்...
பொதுவாக வேற்று மதத்தினரை இந்துக்கள் தாக்க தயக்கம் கொள்வார்கள்.
வேற்று மதத்தினர் மீது நம் மக்கள் ,காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பமாட்டார்கள்..
இதனால் ஆணவ கொலைகள் குறையும்.
நம் மீது ஆதிக்கம் செலுத்த இந்துக்கள் தயக்கம் கொள்வார்கள்.
ஒரு வேலை இந்துக்கள் நம் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அது மத பிரச்சனையாக மாறும்...
பௌத்தர்கள் ஒன்றிணைந்து எதிர்க்க துணிவார்கள்.
அரசியல் வாதிகள், நாம் ஒற்றுமையாக ஒரே மதமனால் நம் கோரிக்கைகளுக்கு முக்கியதுவம் கொடுப்பார்கள்(வாக்கு வங்கிக்காக)
நமெக்கென்று தனியே ஒரு வாக்கு வங்கி கிடைக்கும்,சமூக பலம் கிடைக்கும்.
சட்டரீதியாகவும்,சமூக ரீதியாகவும், உங்களிடமிருந்து "இந்து" அடையாளம் இல்லாமல் போகும்.
நீங்கள் பௌத்தராகிவிட்டால் , "Religious Minorities" என்ற மதச் சிறுபாண்மையினர் என்ற கூடுதல் தகுதி பெறுகிறீர்கள்.
அப்போது, இஸ்லாமியர், கிறித்துவர் போன்று கல்வி, தொண்டு நிறுவனங்கள், வழிபாட்டு உரிமைகள், சமூகப் பாதுகாப்பு என அனைத்தும் கிடைக்கும்.
மொத்தத்தில் நாம் "இந்து" என்ற அடையாளத்தை விட்டு விலகி பௌத்தம் ஏற்கும்போது, கூடுதல் உரிமைகள் பெறுகிறோம்.
முறையாக பௌத்தராகி, பௌத்த வாழ்வியலை தொடரும்போது தான் இந்தியாவுக்கு வெளியே ஜப்பான், சீனா, கொரியா, தாய்லாந்து, இலங்கை,போன்ற பௌத்த நாடுகள் ஆதரவு கிடைக்கும்.
இஸ்லாமியர் மற்றும் கிறித்தவர் போன்று வெளிநாட்டினரின் தொடர்புகளும், நமக்கான பாதுகாப்பு அரணாகவும், அவர்களை அனுகுவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.
நாம் "இந்து" என்ற அடையாளத்துக்குள் இருப்பதால் தான் இந்தியாவிற்குள் நாம் பாதிக்கப்படும்போது, எவரும் குரல் கொடுப்பதில்லை.
வெளிநாட்டினர் எவரும் செவிமடுப்பதில்லை. நீங்கள் பௌத்தராக இருந்து பாதிக்கப்பட்டால்,
ஆசிய கண்டமே உங்களுக்காக அணிவகுத்துக் குரல் எழுப்பும். இது இந்தியச் சாதிவெறியர்களை குலை நடுங்கச் செய்யும்.
இதனால்,தீண்டாமையை நம் மீது திணிக்கும் சாதி இந்துக்கள்,
நாளடைவில் மனதளவில் உளவியல் மாற்றம் பெறுவார்கள்.
இவர்கள் இந்துக்கள் அல்ல. இவர்கள் அனைவரும் பௌத்தர்கள் என்று...
அப்போதுதான் "தீண்டாமை ஒழியும்".
"சமூக விடுதலை"கிடைக்கும்.
No comments:
Post a Comment