அறியாமையிலிருந்து பெறும் விடுதலைதான்
அருந்ததியர் பெறும் விடுதலை
கேள்வி : உங்கள் கருத்துக்கள் பற்றிய விவாதம்
எதுவும் பெரிய அளவிற்கு எழவில்லையே. அதுபற்றி என்ன
நினைக்கிறீர்கள்?
உறைப்பதற்கு நிறைய உண்டு என்பதால் உரைப்பதற்கு
ஒன்றுமில்லாதிருக்கிறார்களோஎன்னவோ?பௌத்தத்தைப்பற்றிப்
பேசாமலேயே பௌத்தக் கருத்துக்களையும், தொன்மங்களையும்
திரித்துப் புராணங்களையும், வேதங்களையும் எழுதிக்
கொண்டு தம்மை நிலை நிறுத்துபவர்களாகப் பார்பனர்கள்
இல்லையா? அதுபோலத்தான் இதுவும். ரிவீறீறீ தீஹ் uஸீtஷீuநீலீணீதீவீறீவீtஹ்
என்பது ஒரு யுக்தி. ரிவீறீறீ தீஹ் sவீறீமீஸீநீமீ என்பது இன்னொரு யுக்தி. “ஏன்
சக்கிலியர்களைப் பற்றிப் பேச வேண்டும், அதுவும் இவ்வளவு
ஆதாரங்களுடன் வரலாற்றை முன் நிறுத்திப் பேசப்படும் இது
எமது நலன்களுக்கு எதிரானதாக வளர்ந்து விடும்” என்பதான
அச்சமே சக்கிலியர்களைப் பற்றிப் பேசவிடாத மௌனமாய்
கனக்கிறது. ஆனால் வரலாற்றின் வாயை மூட உலைமூடி
ஒன்றுமில்லை. லூயிஸ் அல்தூசர் ஒருமுறை சொன்னார்,
“வரலாற்றில் மறைக்கப்பட்டவை எவையும், தூக்கி எறியப்பட்ட
பழைய செருப்புகளைப் போன்றனவன்று எறிந்தால் திரும்ப
வராமலிருக்க. நிகழுங்காலத்தின் பருண்மைச் சூழல்களின்
தேவைக்கும், பண்பிற்குமேற்ப வரலாறுகள் வெளிக்கசிந்து
கொண்டே இருக்கும். வெடிப்புற வெளிப்படவும் செய்யும்.
அதையெல்லாம் நிரந்தரமாகத் தடைபோட்டுத் தடுத்துவிடலாம்,
தன்னால் முடியும் என்பதுதான், பார்ப்பனியமாகவும்,
பாசிசமாகவும் பறை அடிப்படைவாதமாகவும் இருக்கும்
பெருங்கதையாடல்களின் கொக்கரிப்பு. அதெல்லாம் பிளவுற்றுச்
சிதறுகின்ற காலங்கள் இவை. சாக்கிய பந்துக்களான
நாங்கள் எங்களதான வரலாறுகளை எம்மொழியாயினும்,
எவ்விடமாயினும் தேடித் தேடிக் கண்டடைந்து விடுகிறோம்.
சக்கிலியர்களின் விடுதலை என்பது அறியாமையிலிருந்து பெறும்
விடுதலையாகத்தான் இருக்கும். தன் வரலாறும், உலக ஞானமும்
தன் தேவையும், இருப்பும் பற்றிய கரிசனத்தோடு அது தன்னையும்,
உலகையும் விமர்சித்துக் கொண்டு முன்னேறும். எனவே பேசாப்
பொருளைப் பேசத் துணிவதும், கேட்காக் கேள்வியைக் கேட்கத்
துணிவதும்தான் சக்கிலியர்களின் அரசியலாய், தத்துவமாய்
கலாச்சார நடைமுறையாய் இருக்கும். அடிப்புறம் நனையாத
தோணி எந்த நதியில் ஓடும்? பேசாமல் இருக்கிறார்கள் என்பதே
எமது மக்களின் வரலாற்று ரீதியான உண்மைகளை அங்கீகரிக்கும்
ஒரு பாணிதான் என்பது என் அபிப்ராயம். - புத்தமித்திரன்
No comments:
Post a Comment