Thursday, July 23, 2020

பௌத்த அழிப்பும்பாபாசாகேப் பிறப்பும்

பௌத்த அழிப்பும்
பாபாசாகேப் பிறப்பும்..

 பிம்பிசாரர் மற்றும் அஜாத சத்ரு இருவரும் புத்தரின் சமகாலத்தவர்கள்.

 இன்னும் புரியும்படி சொல்ல வேணடும் என்றால், பிம்பிசாரரும் அவரது மகன் அஜாத சத்ருவும் புத்தரின் உறவினர்கள். இவர்கள் தான் பௌத்தத்தை ஆதரித்த முதல் இரு மன்னர்கள். 

கிமு 487 ல் புத்தர் இறந்த சில தினங்களில் ராஜ்கிருகத்தில்( Rajagriha) முதல் பௌத்த மாநாட்டை 500 துறவிகளைக் கொண்டு கூட்டியவர் இந்த அஜாத சத்ரு தான். 

இதன் நினைவாகத்தான் அண்ணல் அம்பேத்கர் தனது வீட்டிற்கு "ராஜ்கிருகம்" என்று பெயர் சூட்டினார். 

சிசுநாக வம்சத்தின் கடைசி மன்னரான காலசோகன், கிமு 387 வைசாலியில் இரண்டாம் பௌத்த மாநாட்டைக் கூட்டி,  பார்ப்பனிய மதத்தை அச்சுறுத்தினான். 

மௌரிய மன்னரான அசோகர், தர்ம மகாமாத்திரர்கள் மற்றும் தர்மயுக்தர்களை ( Dharma Mahamatras  and Dharmayuktas) பல நாடுகளுக்கும் அனுப்பி பௌத்தத்தை உலகறியச் செய்தார்.

 அசோகர் பாடலிபுத்திராவில் கூட்டிய மூன்றாம்  பௌத்த மாநாடே பார்பனியத்திற்கான சாவு மணியாக அமைந்தது. 

தனது மகன் மகேந்திரனையும் மகள் சங்கமித்திராவையும் இலங்கைக்கு அனுப்பி, 

அந்தநாட்டின் மன்னன் திஷ்ஷா (Tissa) உட்பட ஒட்டுமொத்த மக்களையும் பௌத்தர்களாக மாற்றி சாதனை படைத்தார். 

மௌரிய மன்னன் பிருஹத்ரதாவைக் கொன்று ஆட்சியை கைப்பற்றிய, புஷ்யமித்ர சுங்கன் மீண்டும் பிராமணியத்தை மீட்டான். 

கனிஷ்கர் காலத்தில் மீண்டும் பார்ப்பனீயம் பயம் கண்டது. 

கனிஷ்கர் கூட்டிய நான்காவது பௌத்த மாநாடும், ஹர்சர் கூட்டிய கன்னோஜ், பிரயாக் மாநாடுகளும் பௌத்த பிழைத்திருப்பதற்கு  அவசியமாக அமைந்தது. 

சீனப் பயணிகளான பாஹியான் மற்றும் யுவான்சுவாங்கும் கூட பௌத்தத்துக்காய் உலக அளவில் உழைத்தனர். 

சேரிகளில் மாரியம்மனுக்கு மாறி மாறி கோயில் கட்டும் நமக்கோ, பௌத்த விகாரைப்பற்றிய விவரங்கள் தெரியாதது விந்தைதான். 

குப்தர்களின் ஆட்சில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பார்ப்பன மதம் பத்துயிர்  பெற்றது. 

குப்த மற்றும்  பேஷ்வாக்களின் நீட்சியான பாசாகவை தடுக்கும் சக்தி அண்ணலே அன்றி வேறெது? 

சுமார் 3000 ஆண்டு பாரம்பரிய பார்ப்பனீயத்தை பாபாசாகேப் தன்னால்  இயன்ற அளவு தடுத்தார்.

அவரின்  உழைப்பால் உயர் பெற்ற நாமோ, புஷ்யமித்திர சுங்கனின் பிள்ளைகளாய் மாறிக் கொண்டிருக்கிறோம்.

No comments:

Post a Comment