கேள்வி : சக்கிலியர்கள் பௌத்தர்கள்தான் என்று
சொல்லியிருக்கிறீர்கள். இன்னும் ஆதாரப்பூர்வமாக நீங்கள்
சொல்ல முடியுமா?
சக்கலியர்கள் என்ற சொல் பாலிச் சொல் என்பதும், அது
சாக்கிய என்ற சொல்லின் தமிழ் பெயர்ப்பு என்பதும், அந்தப்
பெயரால் அழைக்கப்படும் மக்களாக நாங்கள் 1 கோடியே 25
லட்சம் பேர் இருக்கிறோம் என்பதே நாங்கள் பௌத்தர்கள்
என்பதற்கு முதல் சாட்சி. வேறு எந்த தாழ்த்தப்பட்டவர்களாக
ஆக்கப்பட்ட பௌத்தர்களும் ‘சக்கலியா’ என்று அழைக்கப்படாது
நாங்களே அழைக்கப்பட்டோம். விடுதலையைத் தரும் இச்சொல்
ஒரு மிகப்பெரிய வரலாற்றைத் தன் கற்பத்துள் கொண்டு 2500
ஆண்டுகளுக்கு மேலும் இதுகாறும் உறங்கி வந்திருக்கிறது, இன்று
விழிக்கிறது.
சக்கிலியர்கள், பௌத்தர்கள் என்பதற்கு தீண்டத்தகாதவர்
களாக அவர்கள் உருவாக்கப்பட்டது இரண்டாம் சாட்சியம்.
ஏனென்றால் சாக்கியர்கள் சிராமண தத்துவ மரபினை
வளர்த்தெடுக்க புத்தரை ஈன்றவர்களும் அவர் தமது தம்மம், புத்தம்,
சங்கம் எனும் முக்காயங்களையும் உலகெங்கும் பரப்பி மக்களுக்கு
அறிவும், மானமும் கொளுத்தியவர்கள். அதன் பொருட்டே,
சக்கிலியருள் ‘முக்காயனுவாரு’ எனும் குலத்தார் இருக்கிறார்கள்.
தம்மம்பிட்டகா, வினயப்பிட்டகா, ஆனந்தபிட்டகா எனும்
பௌத்தச் சிந்தனைக் கூடைகளைக் காத்துப் பரப்பியவர்கள்
என்பதால் அவர்களுள் ஒரு குலத்தாருக்குப் பெயர்
‘புட்டகலுவாரு’ என்றாயிற்று. ‘புட்டகம்’ என்பது பேச்சு வழக்குத்
தெலுகு; பிட்டகா என்ற பாலி மொழியினின்று தோன்றிற்று.
பாலியினின்று தெலுகைப் போலவே தோன்றிய தமிழில் அது
‘பெட்டகம்‘ என்றாயிற்று.
‘போதிவாரு’ என்றொரு குலம் சக்கிலியர்களுள்
இருக்கிறது. போதி என்ற சொல்லுக்குத் தனியே ஒரு விளக்கம்
வேண்டியதில்லை. ‘தெரிந்தது விளக்கல்’ எனும் குற்றத்திற்கு நான்
ஆளாகக் கூடும். ஆனால் போதிகாரு என்ற அந்தச் சொல்லின்,
அந்தக் கட்டத்தின் வரலாறு என்ன என்பதைச் சொல்ல
வேண்டிய கடமை இருக்கிறது.
போதிவாரு என்றால் போதிமரத்தைப் புனிதமெனக்
கருதியவர்கள், போதி மரத்தினடியில் இருந்த புத்தராம் போதி
மாதவனைப் பின்பற்றியவர்கள் என்ற உண்மை உள்ளங்கை
நெல்லிக்கனி எனத்தெற்றென விளங்கக் காணலாம்.
இப்போதியார்கள் (போதிவாரு எனும் பாலிச் சொல்லின்
தமிழ் வளர்ச்சி) தாம், பௌத்த சங்கங்களை நிறுவி பாட்டும்
யாப்பும் யாத்தார்கள், சங்கங்களுக்குத் தலைமை வகத்தார்கள்
என்பதை இளம் போதியார்கள் என்ற தேரர் (‘தேரா’ என்ற
பாலிச் சொல்லுக்கு மூத்தவர் என்ற பொருள், பாலியினின்று
பிறந்த தமிழில் தேரா & ‘திரு’ என்றாகிறது. சிங்களமோ
தேரா என்பதைப் பெயருக்குப் பின்னால் இட்டுச் சிறப்புச்
செய்கிறது. எ.டு.: மஹாமாதிகத் தேரர்) சங்கப் பாடல்களை
யாத்துள்ளமையிலிருந்துஅறியக்கிடக்கிறது.இளம்போதியார்என்ற
சொல்லே முதபோதியார் இருந்திருப்பதைக் காட்டுகிறது என்பது
குறித்து தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் விளக்கியுள்ளமையை
நினைவுப்படுத்திக் கொள்ளத் தோன்றுகிறது. (எனவே
சக்கிலியர்கள் தமிழ் மொழியின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும்
அப்பாற்பட்ட அன்னியர்கள் அல்லர். மாறாக மண்ணுக்கேற்ற
மொழியை & அம்மக்களின் தேவைக்கேற்ப வடித்துக் கொடுத்த
பௌத்தர்களின் வழித்தோன்றல்கள், அதுவும் சங்கம் வளர்த்துச்
சிறப்புச் செய்த கோசங்கிகள், மாதங்கிகள், போதியார்கள் என்பது
விளங்கும்).
திருவள்ளுவ நாயனார் பறையர் என்று ஓயாது வாய்ப்பாட்டுப்
பாடும் நண்பர்களுக்கு திருவள்ளுவர் ‘மாதாங்கி’ என்றும்,
‘செந்நாப்போதர்’ என்றும் (போதையன், போதையரு என்று
பெயரிடும் வழக்கம் இன்றும் சக்கிலியர்கள் மத்தியில் விளங்கி
வருவதைக் களப்பணி அறிவு ஜீவிகள் கண்டு கொள்ளவும்)
‘முள்ளுப்பழன பட்டத்த தீசின வள்ளுவ சாக்கியனுத்த முந்து
கனின யாதிகத் தல்லி’ (முள்ளில் விழுந்த ஆடையை எடுத்த
வள்ளுவ சாக்கியனை முதலில் ஈன்ற மாதிகத்தாய் என்பது
பொரள் & என்று ஆந்திராவில் வழங்கி வரும் சொலவராந்தமும்
= சொல் + வரவு + அந்தம் = முடிவின்றி வரும் சொல் &
பழமொழி) வள்ளுவமாதிகளு என்று கர்நாடகத்தில் வழங்கி
வரும் சொல்லும் வள்ளுவ சக்கலி என்ற சக்கலியருள் உள்ள
ஒரு பிரிவும் கொண்டு வள்ளுவர் & பௌத்தரும் & சக்கலிய குல
விளக்கும் என்ற உண்மை விளங்கக் கிடைக்கிறது. ஒருவேளை
வள்ளுவர் என்பது குடிதோற்றுவித்த முநியாக இருந்து அவருள்
கிளைத்த சிறந்த பெரியோர்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை
& வள்ளுவர்கள் என்று அழைத்திருக்கலாம். மேலும் அவரை
‘மாதாதுபங்கி’ என்பதிலிருந்தும் & அவர் பௌத்த சாக்கியக்
குடியினை வழி நடத்திய பௌத்தப் பெருமகன் என
அறியலாம்.
சக்கிலியர்களின் வாழ்விடங்களை ‘மாதிகப்பள்ளிலு’ என்று
அழைப்பதிலிருந்தும் மாத்யாமிகா எனும் பௌத்த நெறியைப்
பின்பற்றி சாக்கியருள் ஒரு பிரிவான மாதிகாக்கள் இருந்த
இடம் என்பதை அறியலாம். பீரஹவாருலு என்றொரு குலமும்
சக்கலியருள் இருக்கிறது. பீரகம்=பௌத்தர் தங்கும் விகாரைகள்
என்பதன் தெலுகுத் திரிபு. விஹாரவாருலு என்பதாலும்
சக்கலியர்கள் பௌத்தர்கள் என்பது தெளிவு.
நான் கண்டறிந்துச் சொல்லும் இவை எனது கற்பனையோ,
கதையாடல்களோ அன்று. அப்படி எவரேனும் கருதிக்
கொண்டாலும் ‘ஆசிரியரின் இறந்து போன யுகத்தில்’
பௌத்தன் / வாசகன் விழித்துக் கொள்ளும் யுகத்தில் இருக்கும்
நான் கவலைப்பட வேண்டியதில்லை. இக்குலங்கள் & நிஜம்
& அவை எமது சமுதாயத்தினுள் கொள்வன & கொடுப்பன
குறித்த விதிகளை வரையறுக்கின்றன. மச்சாளுவாரு & மீனை
& (புத்தர் தனது ஆடைகளைக் களைந்து கரை மீது வைத்து
விட்டு, திருமேனியை நதியிற் படிந்து கழுவி எழும் வரை அவர்
தம் ஆடைகளை தன் மூச்சுத் திணறும்படி நீருக்கு மேல்
தலையை வைத்துக் காத்துக் கொண்டிருந்து அதனால் இறந்த
மீனை ஞானக் கண்ணுடைய அய்யன் சக்கியா எனும் சக்கலியப்
பெருமாளான புத்தர் உயிரூட்டி அந்த மீனிடம் உனக்கு என்ன
கைமாறு நான் செய்யக் கூடும் என்றதற்கு அய்யனே நீரின்
அழுக்கைத் தின்று சுத்தப்படுத்தும் எனக்கு என்றென்றைக்கும்
கௌரவம் கொடுக்கும் வரம் தர வேண்டும் என்றது. அதனின்
கோரிக்கைக்கு இணங்கி பகவான் புத்தர் தாமே அந்த மீன்
குலத்தில் பிறந்து மனுக்குலத்தால் அம்மீனினம் வணங்கப்படும்
பெருமையைத் தருவேன் என்றார். அவ்வண்ணமே அண்ணல்
தோன்றிய அவதாரம் மச்சவதாரம்) அந்த மச்சவதாரத்தைப்
பூஜித்துப் போற்றி வணங்கிய குலத்தவராதலால் எமது
சக்கலியர்கள் ‘மச்சளுவாருளு’ என்றும், ‘மச்சவதாரவாருளு’
என்றும் அறியப்பட்டார்கள்.
திருப்பதியில் நிற்கும் வெங்கடாச்சலபதியின் கோயில்
பௌத்தக் கோயில் என்பதும் அது விஷ்ணு என்ற பாலிச்
சொல்லில் ‘ஞானம் பெற்றவன்’ என்ற புத்தரின் நின்ற கோலம்
என்றும், கிருஷ்ணம் = கரியவன் என்ற கிருஷ்ணவதாரம் =
அய்யனின் நடந்த கோலம் என்றும், திருவரங்கத்தில் அய்யன்
நிர்வாணம் எய்திய ‘அறிதுயில்’ வண்ணத்தினைக் கிடந்த கோலம்
என்றும் அறிஞர்கள் விளக்குவதினின்று அறியலாம். ஆயின்
பௌத்தர்கள் இளைத்ததும், புத்தரையே விஷ்ணுவினின்று
வேறாக்கி விஷ்ணுவைப் பார்ப்பனர்கள் கைக் கொண்டதும்,
புத்தரை அவரின் அவதாரமாக்கியதுமான ஆரியக் கூத்து
ஏற்படுத்திய கேட்டினை என்ªன்னபது?
புத்தரைத் திருவரங்கம் என்பதும், வெங்கிடசலபதி என்பதும்,
இவை மஹாயான பௌத்தம் தோன்றிய காலத்திய நிகழ்வுகள்
என்பதும் புத்தரைப் பற்றிய கற்பனை சிருஷ்டிகள் - நிஷீtலீவீநீ வீனீணீரீவீஸீணீtவீஷீஸீ
- என்று சொல்லப்படும் பிரம்மாண்டமானவை என்பதும்
(பாமியான்புத்தர்சிலைகளையும்,ஸ்ரீலங்கபௌத்தசிலைகளையும்,
கன் ரகரி குகைச் சிற்பங்களையும் காணுறும்போது) கொண்டு
அவரைப் பெருமாள் என்று எமது குலத்தார் அழைத்துத் துதித்துப்
போற்றினர். பெருமாள்=பெரும்+ஆள் என்பது தெளிவு. இந்தப்
பெருமாளை குலத் தெய்வமாகக் கொண்டவர்கள் எம்மவர்
என்பதை “மீரு பெருமாள் குடிவாரா?” & “நீங்கள் பெருமாள்
கோவில்காரர்களா?” என்று எமது மக்கள் ஒருவரையொருவர்
அறிமுகமான உடனே கேட்டுக் கொள்வதினின்றும் எமது
கோயில்கள் பெருகிக் காணக்கிடப்பதினின்றும் அறிக.
எங்களுள் ‘பந்திவாரு’ என்றொரு குலம் இருக்கிறது. இவர்கள்
ஏன் பந்திவாரு என்று அழைக்கப்படுகிறார்கள்? ‘பந்தி’ என்ற
தெலுகுச் சொல்லுக்குப் ‘பன்றி’ என்று பொருள் ‘பன்றியைக்’
குலக்குறியாக (tஷீtமீனீ) கொண்டவர்கள் என்று அர்த்தம்.
அதே சமயத்தில் ‘சுகரலு’ என்றும், ‘வராகவதாரலு’ என்றும்
ஆந்திராவில் ஒரு மாதிகப் பிரிவு இருக்கிறது. ‘சுகரோ’ என்ற
பாலிச் சொல்லுக்குப் ‘பன்றி’ என்று அர்த்தம்-. சுகரோ & வராகம்
என்று சமஸ்கிருதத்தில் இது வழங்குகிறது. வராகம் தெலுங்கிலும்
புழங்கிவரும் சொல். இது என்ன வரலாற்றைக் குறிக்கிறது?
விஷ்ணுவாம் புத்தபெருமானை எந்தவொரு ஜீவராசிகளும் அவர்
தமது நிஷ்டையிலிருக்கும்போது அண்டித் தீங்கு செய்து விடக்
கூடாது என்று, பன்றி ஒன்று ஊனுறக்கம் பாராது காவல் காத்து
உடலும், எலும்பும் இளைத்து, வனப்பும், கொழுப்பும் குறைந்து
மடிந்து விட்டது. அறிதுயில் பெருமான் இஃது அறிவாராதலால்
அப்பன்றியை உயிர்ப்பித்து “மிருகராசிகளில் சிறந்த பசுவே!
(பசு என்பது பாலியில் அனைத்து விலங்குகளுக்கும் வழங்கும்
பொதுவானச் சொல். அதை மாட்டிற்கு மட்டுமானச் சொல்லாகச்
சுருக்கிறயது பார்ப்பனியத்தின் அரசியல்) உனக்கென்னால்
ஆவதுதான் எது?” என்றார் அய்யன். அதற்கு “அய்யனே!
நீங்கள் என்னை அழைத்த விதமே நானாகக் கடவதே நான்
வேண்டுவது” என்று இறைஞ்சியது. அதனின் அறிவையும்,
பக்தியையும் மெச்சிய சாக்கல்ய மாதவனார் “மனுக்குலத்தின்
கழிவைச் சுத்திகரிக்கும் நின்னை மனிதன் தின்னக்கடவது; யாமே
உமது மிருகராசியில் அவதரித்து இப்பூவுலகை ரட்சிப்போம்.
அவ்வமயம் யாம் வராக மூர்த்தி எனும் திருநாமம் கொண்டு
எழுந்தருளுவோம். என்னைப் பூஜிக்கும் எனது அன்பர்கள்
இனி உன்னையும் பூஜிப்பார்கள். அவர்களின் குடியும், குலமும்
நினது திருப்பெயரால் உலகறிய விளங்கட்டும்” என்றருளினார்.
அங்ஙனமே வராகவதாரமும், வராகவதாருலுமான சாக்கிய
குலத்தோர் பன்றியைக் குலக்குறியாகவும், தெய்வமாகவும்
கொண்டனர். இதுதான் ‘பந்திவாரு’ என்று உலகறிய விளங்கும்
எமது சாக்கல்யரின் ஒரு பிரிவின் வரலாறு.
இவ்வாறாக நான் எனது மக்களினூடு சஞ்சரித்து
அவர்களில் முதிர்ந்த ஞானப் பெருமக்களின் வாய்ச்சொல்
கேட்கும் போதெல்லாம் எமது வரலாறு உயிர்ப் பெறுகிறது.
அரலக்ஷ்ஹேசி & தனது வரலாற்றைச் சொற்களைக் கொண்டு
தேடித் தேடி ஓடி தான் யார்? என்று கண்டடைந்த உருக்கம்
மிக்க ‘ஏழு தலைமுறைகள் (க்ஷீஷீஷீts)’ வரலாற்றில் காண்கிறோம்.
அப்படிப்பட்ட உயிர்ப்பும், விறுவிறுப்பும் மிக்க எமது
வரலாற்றைக் கண்டறிய இன்றும் யாங்கள் கொண்டுள்ள
குடியும், குலமும், அருகியும், திரிந்தும், மருவியும், எங்களோடு
இருந்து வரும் பால, தெலுகு, தமிழ், கன்னடச் சொற்களும்
எமது வரலாற்றை ‘யாம் பௌத்தர்கள்’ என்பதைக் கண்டடைய
உதவும் மைல்கற்களாகும். பௌத்தர்களாகிய யாம் குடியையும்,
கோயில்களையும், நூல்களையும், நிலபுலன்களையும்,
ஆடுமாடுகளையும், இழந்து இன்று தீண்டப்படாதவர்களாக்கப்ப
ட்டுள்ளோம். எமது கடவுளாம், உலகின் இரவு, பகலற்ற திவ்விய
ஜோதியாம் அவலோதப் பெருமாளோ பார்ப்பனியத்தாலும், சாதி
இந்துக்களாலும் தீண்டப்படாத கடவுளாக ஆக்கப்பட்டுள்ளார்.
கட்டுண்டோம், இனி பொறுப்பதில்லை. வில் உண்டு, விடுதலை
தரும் சொல் உண்டு, விடுதலை உண்டு கண்டீர்.
எழுத்தின் அரசியல் என்பது ஒரு வன்முறை என்பதும் அது
வரலாற்றிற்கு அநீதி இழைப்பதாகவும் இருக்கிறது என்பதும்,
வாய்மொழிகளை, எம்மூடு புழங்கிவரும் கதைகளை, ஐதீகங்களை,
சொற்களை யாம் பௌத்தர்கள் என்பதற்கு ஆதாரமான எனது
கதைப்புகளை எழுத்து வடிவத்தில் வராததாலேயே புறக்கணித்து
வருவது எமது வரலாற்றுக்குச் செய்யும் வங்கொடுமையாகும்.
எம்மை ஒதுக்கி, ஒடுக்கியபோதும் யாங்கள் இன்னும்
பிழைத்திருப்பது எமது மொழியை, சொற்களை, தெய்வங்களை,
வரலாற்றை நாங்கள் பூடகமாகவும், மறைமுகமாகவும் எங்களூடே
கதைத்து வருகிறோம். ஒரு காதில் பேசுவது, இன்னொரு
காதிற்கு கேட்கா வண்ணம் கிசுகிசுத்து வருகிறோம். ‘சிம்ஹத்தின்
கர்ஜனையை கர்ஜிக்க வரும்’ சாக்கிய சிம்ஹம் எமக்கு இன்று
வாக்கினை நல்கும். ‘தாச’ பேரியை முழக்கி (தாசரிகள் ஒரு
மாதிகப் பிரிவு) நாங்கள் மீண்டும் மானுடம் இனிது வாழ வேண்டி
தம்மத்தைப் போதிக்க, சாதிக்க எழுவோம் போதியராய், நல்ல
மாதியராய், நல்ல மானுட சாதியராய், எம்மூடு வாய்மொழியாய்
விளங்கி, வழங்கி வரும் சொற்களே எமது குலங்கள் ‘பௌத்தர்கள்’
என்பதற்கான ஆதாரங்கள்.
ஆப்ரிக்காவின் வரலாறுகள் மூடி மறைக்கப்பட்டபோது
“உனக்குத் தத்துவ மரவு கிடையாது. எழுத்தில் ஏதும் உன்
வரலாற்றுக்கு ஆதாரமில்லை” என்று வெள்ளை வெறித்தனம்
கொக்கரித்தபோது, “என் வரலாற்றை ஏடேறவும், என் மக்கள்
ஈடேறவும்விடாதுதடுத்தநீஎழுதப்பட்டவரலாற்றைகேட்கிறாயா?
எனது வார்த்தைகளை என்னுள் புழங்கி வரும் கதைப்புகளை
எவ்வளவுதான் நீ அடக்கினாலும் நான் மறக்கப்போவதில்லை.
அப்படியே உன் வங்கொடுமைக்காட்டப்பட்ட எனது உடல்
நோயினும், பசியினும் வருந்தி தேய்ந்து, அழிந்து போனாலும்
என் எச்ச, சொச்சங்களை என் மக்களுக்கு நான் விட்டுச்
செல்கிறேன். அவை எம்மைப் பற்றிய நினைவுகளை எமது
பாலகர்களின், சிறுமியரின் நெஞ்சில் விடுதலைக் கனலை
நீறுபூத்த நெருப்பாய்க் கனன்று கொண்டிருக்கச் செய்யும்” என்று
‘மய்யோ மற்கடலோ மழைமுகிலோ, அய்யோ இவன்என்ன,
அழியாவோர் வடிவழகுடையோர்’ என்று வியக்கும்படியாய்
இருக்கும் எமது கருப்பழகர்களும், அழகிகளும் ஆப்ரிக்க
கண்டத்திலே முழங்கினார்கள்.
வெள்ளையரின் எழுத்தின் வன்முறையை அதனின்
செவ்வியல் தன்மையை மொழியின் தரம் பேசும் பம்மாத்தை
ஊதிப் புறந்தள்ளி எமது பாட்டாதி பாட்டன்களும், எமது
பாட்டாதி பாட்டிகளும், இரத்தமம், சதையுமாய் உலவி வரும்
கதைப்புகளையும், வரலாறுகளையும் பதிவு செய்வோம். அதை
முன்னெடுத்து எமது வரலாறு என்ன என்பதை உலகுக்கு
உணர்த்தக் கொண்டு வருவோம் என்று புறப்பட்ட முயற்சிகளின்
வெளிப்பாடுதான் ‘லிவீtமீக்ஷீணீtuக்ஷீமீ’ ன் வன்முறையை மறுக்கும் ‘ளிக்ஷீணீtuக்ஷீமீ’
எனும் மொழிப்புரட்சி. அறிஞர் அ.மார்க்ஸ், எஞ்சியவைகளின்
வரலாற்றை ஒடுக்கும் ‘செவ்வியல்’ மொழிகளின் வன்முறையை
மிகச் சரியாகப் பின் நவீனத்துவக் கருத்துக்கள் மூலம் தோலுரித்துக்
காட்டியுள்ளதும், நடைமுறையில் கட்டமைக்கப்படும்
செவ்வியல் தன்மைகளை சிந்தனைச் சிம்ஹம் பெரியார்
போட்டுடைத்ததை அடையாளம் காட்டியுள்ளதும் நன்றியோடு
நினைவுகூரத்தக்கன. எமது மக்களூடு வழங்கி வரும் சொற்கள்,
நினைவுகள், கதையாடல்கள் என்ன என்பதையெல்லாம் பறைக்
கொடுந்தமிழும் (பெருஞ்சித்திரனாரின் வெறிச்சிந்துகளும்)
வெள்ளாளக் கொடுந்தமிழும் (வேதாச்சலம் பிள்ளைவாளின்
தமிழ், கலியாணசுந்தர முதலியார்வாள் தமிழும்தான்) காது
கொடுத்துக் கேட்குமா? கேட்கத் தோணுமா? அங்கத்துள்ள
அத்தனைத் துவாரங்களும் ஆதி சேஷனாய் அல்லோ
அனலைக் கக்கும்! அய்யோ நான் என்ன செய்வேன்? எனக்குச்
சொல்லிக் கொடுக்கப்படும் கல்வி என் மண்டை ஓட்டில்
மலம் நிரப்புவதாகவும், என் விரைகளைக் காயடிப்பதாகவும்
இருக்கின்றதே! நோயும், நொடியும் சுமத்தப்பட்ட வறுமையும்,
ஒடுக்கப்பட்ட, தாக்கப்பட்ட உடல்களும் கொண்ட எனது
கோடானுகோடி பாட்டன்களும், பாட்டிகளும் செத்துக்
கொண்டிருக்கிறார்களே! அய்யோ அவர்களிடம் எமது
குலக் கொழுந்துகள் அருகமர்ந்து கேட்காமல் மடியமர்ந்து
வாழ்வின் வரலாறு கேட்கும் பெருமை மிகு வாய்ப்புகள் அருகி
வருகின்றனவே. எமது சக்கலியப் பெருமானே யாம் என்ன
செய்வோம்?
கொண்ட தொட்டியா, மாரகலு தொட்டியா, பண்டிய
தொட்டியா, எர்ர தொட்டியா (‘பீ’ என்ற உச்சரிப்புக் கொள்ள
வேண்டும். இங்கு எழுதப்படும் ‘ட’ விற்கு மூக்கிழந்த பாழையான
தமிழில் ‘ட’கர வர்க்கமும் தகர வர்க்கமும்தான் கிடையாதே.
கேட்டால் ‘ழ’கரம் இருக்கிறது என்று பேயாடத்தான்
‘புழவர்கள்’ இருக்கிறார்களே. அவ்‘ழ’கரம் பாலியில் இருக்கிறதும்,
தெலுகிலிருக்கிறதும் அறியா நிர் மூட மூடு தமிழ்ச் செல்வங்கள்
இருக்கிறார்களே! இவர்களால்தானோ என்னவோ மெல்லத்
தமிழினிச் சாகும் என்று இந்துத்துவ பாரதி பேசியிருக்கிறான்)
ராஜ தொட்டியா, நாத தொட்டியா, தராகத தொட்டியா,
நாமஜெல்லி தொட்டியா, குண்ட தொட்டியா, லோகநாத
தொட்டியா, அவலோகித தொட்டியா, பழனி தொட்டியா
எல்லாம் செத்துப் போய்க் கொண்டிருக்கிறார்களே! செத்துப்
போய்விட்டார்களே! அய்யோ விடுதலை தரும் வரலாற்றை
அவர்கள் எங்கு சொல்லி வைத்தார்களோ?, எங்கே போட்டு பூட்டி
வைத்தார்களோ? தெரியவில்லையே! அது எந்த இடிக்கப்பட்ட
விகாரையில், எந்தத் தோட்டத்தில், எந்தக் கோயிலின் கீழ்,
எந்த ஆதிக்க வெறியரின் (எமது பறிக்கப்பட்ட) நிலங்களுக்குள்
இருக்கின்றதோ? தெரியவில்லையே!
மாராயி தொட்டம்மா, நயின் பெத்தம்மா, அருக்காணி
தொட்டம்மா, பள்ளி கொண்டம்மா, குருகூ தெலுவாரு அவ்வா,
கொண்டவ்வா, கோன தொட்டம்மா, பிட்டகளு பெத்தம்மா,
எல்லம்ம அம்மம்மா, வீரமாதி கத்தி, வீர கொட்டம்மா,
பெருயாயி கொட்டம்மா, பெருமாளு பெத்தம்மா எல்லாம்
இல்லையே! செத்துக் கொண்டிருக்கிறார்களே. என் பாட்டி
செத்த போது நான் சொல்லி வரும் எத்தனையோ வரலாறுகளின்
கதைப்புகளின் ஆதாரமாய் இருந்த ரத்தமும், சதையுமாய்
நடமாடிய வரலாறு மரித்து விட்டதாய்த்தான் நான் கதறிக் கதறி
அழுகிறேன். (அ.மார்க்சிடம் ஒருமுறை என் பாட்டியைப் பற்றிப்
பேசும் போது தீக்ஷீஷீளீமீ பீஷீஷ்ஸீ & மார்க்ஸ் சொன்னார் பாட்டிகளைப்
பற்றிக் கவலைப்படும் கலெக்டர்கள், அதுவும் இளைஞர்கள்
கூட இருக்கிறார்களா என்று தான் வியந்து போனதாய்த்
தெரிவித்தார்)
அவர்களோடு மடிந்துபோன வரலாறுகள், கதைகள்
யாங்கள் வீறார்ந்து வாழ்ந்த விதம், தம்மமும், புத்தரும், சங்கமும்
பரிபாலித்த நேர்த்தி, கீர்த்தியனைத்தும் அறியப்படாமலேயே
போய்விடுமோ. இன்னும் இருப்பவர்களிடமேனும் விடுதலை
தரும் வாய்ச்சொல் பௌத்த மந்திரம் போல் ஒரு சொல்
கேட்டறியலாகாதா? என் குல மக்களும், மானுடக் காதல் மிக்க
அறிஞர்களும் அப்பணியைச் செய்ய முன்வரக்கூடாதா? என்று
யாம் இறவா இறைந்து நிற்கிறோம்.
இதெல்லாம் செய்ய கி.ராஜநாராயணன் போன்றவர்களுக்கும்,
இற்று விழுந்து போகும் புளியமரத்திற்காக ஒப்பாரி
வைப்பவர்களுக்கும் மனம் வருமா? முடியாது. கோபல்ல
கிராமம் மட்டும்தான் அவர்களுக்குத் தெரியும். தன் சாதி உண்டு,
புணர்வுக்குப் பெண்டுண்டு, உண்ணப் பருப்புண்டு, கதைக்கப்
பொய் மூட சாஸ்திரங்கள் பல உண்டு, இழவெடுக்க இலக்கியச்
‘செவ்வியல்கள்’ ஒளிவட்டங்கள் உண்டு, அவ்வளவுதான்.
ஓதிய மரங்கள் ஒருபோதும் தூணாகா என்றறிவோம் யாம்.
இதெல்லாம் பற்றி ஒரு சிறிதும் கவலையில்லாது “பஞ்சப் பாட்டு
பறைப்பாட்டு” என்று “வந்ததை வாயில் பேசி, வெந்ததை மடியில்
போடென்று” தன் ஊனைப் பெருக்கிக் கொள்வதிலேதான்
பறையரியக்கம் இருக்கிறது. ‘பார்ப்பனன்’ எப்படி ‘இந்து’ என்ற
சொல்லைக் கலாச்சாரத் துருப்புச் சீட்டாக முன்னெடுத்துப்
பரப்பி அதன் பதாகையின் கீழ் தனது அதிகாரங்களைப்
பாதுகாத்துக் கொள்கிறானோ அதே வேலையைப் பறையர்
‘தலித்’ என்ற சொல்லை கலாச்சாரத் துருப்புச் சீட்டாய் தான்
மட்டுமே வசதி வாய்ப்புகளையும், பொருளாதார, அரசுத்துறை
அதிகாரங்களையும் அனுபவிக்க வேண்டி பயன்படுத்தி
வருகின்றனர்.
இன்று வாய்மொழி ஆதாரங்களைப் புறமொதுக்கி
செவ்வியலவாதம், பார்ப்பனிய, வெள்ளாள மொழித் தூய்மை
வாதம் பேசும் ‘தமிழர்கள்’ பறையர்கள்தாம். அது ஞா.
தேவநேயப் பாவாணர், அயோத்திதாசர், குணா, பெருஞ்சித்திரன்,
திருமாவளவன், சிவகாமி என்று நீண்டு கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் முடி வைத்தார்போல பறையர்களைத்
தமிழகத்தின் ‘ஆதிகுடிகள்’, ‘தமிழ்’ பறையர் மொழி என்று தமிழ்
அறிவு ஜீவிகளை வேறு பறை மயக்கத்தில் ஆழ்த்தியாயிற்று.
சக்கலியர்கள், பௌத்தர்கள் என்பது பற்றிய விரிவான
ஆராய்ச்சிகளை, வாய்மொழி ஆதாரங்களைத் திரட்டியும் குலம்,
குடி போன்றவைகளைப் பற்றிய ஆதாரங்களைச் சேகரித்தும் மிகச்
சிறந்த ஆவணம் ஒன்றை வெளியிட அமெரிக்க கொலம்பியப்
பல்கலை அறிஞர் ஒருவர் முயன்று கொண்டிருக்கிறார்.
அதே போல தில்லி ஜவகர்லால் பல்கலையில் இயங்கும்
தோழர்கள் பலரும் இப்பணியினைச் சிரமேற்கொண்டு உழைத்து
வருகிறார்கள். கண்ணின் நீர் துடைத்துப் புன்னகை ஏற்றும்
உன்னதமான வரலாறு ஒன்று எழுந்து கொண்டிருக்கிறது.
புத்தமித்திரன்
No comments:
Post a Comment