Saturday, July 25, 2020

Biological Buddhist-Sakkilyar-Arundhathiyar in Buddhist land

கேள்வி : சக்கலியர்களை 17&ம் நூற்றாண்டில் மலம்
அள்ளுவதற்காகக் கூட்டி வரப்பட்டவர்கள் என்று
கூறுகிறார்களே...
ஏன் சக்கலியர்கள் 17&ம் நூற்றாண்டில் மலம்
அள்ளுவதற்காகக் கூட்டி வரப்பட்டவர்கள் என்று சொல்லாமல்
ஓட்டி வரப்பட்டவர்கள் என்று கூறுங்களேன். வரலாற்றின்
உக்கிர நெருப்பு போன்ற, பொட்டலம் கட்ட முடியாமையின்
விபரம் அறியாத வெட்கம் கெட்டவர்கள், மூர்க்க மூடர்கள்
வேண்டுமானால் அப்படிப்பட்ட கருத்தைச் சொல்லுவார்கள்.
அப்படிச் சொல்வதால் அவர்களுக்கு நிறைய லாபங்கள்
இருக்கின்றன.
17&ம் நூற்றாண்டிற்கு முன்பு வரை கல் தோன்றி மண்
தோன்றாக் காலத்தே முன் தோன்றிய தமிழ்க் குரங்கிற்கு
மலத்துவாரம் பரிணாம வளர்ச்சியில் உருவாகதிருந்ததா என்ன?
நவ துவாரங்களில் ஒன்றான வாய் துவாரமே கொண்டு
கொள்வதும், தள்ளுவதுமான பணியை 17&ம் நூற்றாண்டுக்கு
முன்பு வரை ‘தமிழர்கள்’ செய்து கொண்டார்களாமோ?
வரலாற்றை மூடி மறைக்கும் அயோக்கியர்கள் பேசும்
வேடிக்கை வாதம்தான் சக்கலியர்கள் மலம் அள்ளும் சாதி
என்பது. மகுடம் இழந்து விட்டால் மன்னன் பிச்சைக்காரனாகவும்,
தன்னையே விற்கும் பரிதாப நிலைக்குரியவனாகவும் ஆகி
விடுவதென்பது எளிய விசயம். அப்படித்தான் வீழ்ந்து விட்ட
சத்திரியர்களான சக்கலியர்கள் மலம் அள்ளும்படியெல்லாம்
இழிவுபடுத்தப்பட்டார்கள். திண்ணியத்தில் மலம் தின்ன
வைப்பத சாத்தியமாகும்போது, மலம் அள்ள வைப்பது
சாத்தியமில்லையா?
மேலும் சக்கலியர்கள் மலம் அள்ளுகிறார்கள் என்று
பேசுவது ஒரு மீssமீஸீtவீணீறீவீst வாதமாகும். கவுண்டர்களும், தேவர்களும்,
பறையர்களும். முதலியார்களும், நாடார்களும் பீ வாரிகளாக
இருந்திருக்கிறார்கள். சைவப் பெருமை பேசும் இலங்கைக்
கரையார்களும், பிள்ளைகளும் இலண்டனிலும், பிரான்சு
தேசத்திலும் பீ வாரிகளாக இருக்கிறார்கள். அதே போல
மலத்திலிருக்கும் அணரிசியையும், நாயின் மலத்திலிருக்கும்
புழுவையும் கூட எதுவுமே கிடைக்காத பஞ்ச காலத்தில் தன்
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பிராமணன் தின்னலாம் என்று
sமீறீயீ ஜீக்ஷீமீsமீக்ஷீஸ்ணீtவீஷீஸீக்காக மத நியாயம் கற்பித்து சாஸ்திரங்கள் எழுதிக்
கொண்ட பிராமணர்களும், ஆரியர்களும், திராவிடர்களும்
பீ வாரிகளாக இருந்திருக்கிறார்கள். அம்பேத்கரின் அத்தை
வீட்டிற்கு அம்பேத்கர் போயிருந்தபோது அவரின் வீட்டிலிருந்து
கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டு ஓடிவிடலாம் என்று
அம்பேத்கர் அவளின் சுருக்குப் பையைப் பார்த்தபோது அதில்
ஓர் அணாதான் இருந்ததால், “இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே
தன் மக்கள்” என்று அன்று முதல் படிப்பில் கவனம் செலுத்தி
மாமேதையுமாய், தத்துவவாதியுமாய், தன்னிகரற்ற பௌத்த
நடைமுறையாளருமாய் உருவாகியவர் அம்பேத்கர். அவரின்
அத்தை ஒரு துப்புரவுத் தொழிலாளி என்பதும், பெருவாரியான
மஹார்களும் அப்பணி செய்தவர்கள் என்பதும் காணக்
கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் வன்னியர்களும், கவுண்டர்களும்,
முதலியார்களும் பீ வாரிகளாக இருந்திருக்கிறார்கள். இது பற்றி
விரிவான களத் தகவல்களை (யீவீமீறீபீ பீணீtமீ) சேகரித்து வருகிறார்
புதுதில்லியைச் சேர்ந்த தோழர் சுரேஷ் என்பார்.
நாமக்கல், சேலம், தாராபுரம், கிருஷ்ணகிரி, கரூர், ஆத்தூர்,
சின்ன சேலம், தாத்தையங்கார் பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய
இடங்களில் பறையர்களும், பள்ளர்களும் மலம் அள்ளும்
துப்புரவுப் பணியாளர்களாய் இருக்கிறார்கள். திருச்சி, மதுரை,
கோவை, சென்னையில் பலதரப்பட்ட சாதியார்கள் துப்புரவுப்
பணியில் ஈடுபட்டுள்ளது தெரியக் கிடைக்கும் உண்மை.
விஜயநகரத்திலிருக்கும் ஆந்திராவின் ‘கலாச்சாரத்
தலைநகரம்’ என்று அறியப்படும் ஸ்தலச் சிறப்பு மிக்கது விஜய
நகரம். ‘பைடிதல்லி’ அம்மன் கோயிலில் எழுந்தருளியிருக்கும்
பைடிதல்லிஅம்மனின்வாரிசுகளாகஇருக்கும் ‘பைடிதல்லிவாருலு’
எனும் சக்கலிய குலத்தார்கள் நாமக்கல்லில் தங்களை ராஜிலு
என்றுதான் அழைத்துக் கொள்கிறார்கள். சக்கலியர்கள்,
சத்திரியர்கள் என்பதை இன்னும் எமது குலத்தில் மூத்த பெரியவர்
ஒருவர் தென்னம்பாளைகளும், கூரப்பட்டும், பொட்டும் (ஙிஷீஜீணீறீ
என்ற சொல்லில் உள்ள ‘ஙிஷீ’ போல இப்பொட்டு என்ற சொல்
உச்சரிக்கப்பட வேண்டும்) சுற்றியும் வேலும், வாளும் கொண்டு
சாமரமும், குடையும் ஏந்தி சக்கலிய வீரர்கள் புடைசூழ
கையில் மிகப் பெரிய வாளுடனும் சாட்டாவார் எனும் 32
கண்ணியுள்ள சாட்டையும் கொண்டு ஆயிரம் பந்தங்களை
முதுகின் மீது கட்டி ஆடிக் கொண்டு பகடை எழுந்தருளி
மாரியம்மனுக்குத் தென்னம்பாளையும், கூரப்பட்டும், பொட்டும்
கொடுத்து ஆந்திராவிலிருந்து வந்து ராஜிலுகள் இறைஞ்சிக்
கேட்க அவர்தம் கோரிக்கை ஏற்று மூன்று தினங்களுக்கு தெலுகு
ராஜிக்கள் கட்டிய கோயிலுக்குள் இருக்கும் விக்கிரகத்தில்
அம்மன் குடியேறுவாள். இவ்வாறு உயிர்ப்பிக்கும் பணியை
மூன்று முறை ‘அண்ணாகாரு மீரே செய்யாண்டி, அண்ணாகாரு
மீரே செய்யாண்டி, அண்ணாகாரு மீரே செய்யாண்டி’ என்று
ஆந்திராவிலிருந்து வந்த தெலுகு ராஜிக்கள் கேட்க எமது சக்கல்ய
பெரியவர் மூன்று முறை உயிர் பிரதிஷ்டை செய்வார். அவ்வாறே
ஆலமரத்தடியில் இருக்கும் பச்சாயி கோயிலுக்கும் பூஜை செய்யும்
உரிமை சக்கலியர்களுக்கு உண்டு. ‘மாசான கொள்ளை’ எனும்
ஆட்டுக்கிடாயின் குரல்வளைக் கடித்து இரத்தம் மட்டுமே
உண்ணும் மாதிகராயலு அவ்வாறு குடித்துத் துப்பும் இரத்தம்
பிள்ளைப் பேற்றையும், தூக்கி மாலை போல வானின் மீது
வீசப்பட்ட ஆட்டுக்குட்டியினை மடியேந்திப் பெற்றவர்கள்
வம்சாவழி பெரும் சம்பத்து உடையதாகும் என்றும் ஐதீகமும்
அந்தப் பெருவிழவும் இன்னும் எமதூரில் நடக்கிறது. மாசான
கொள்ளை எனும் அந்த நிகழ்வு, சுடுகாட்டில் உட்கார்ந்திருக்கும்
சாக்க முனியின் முன்னே ஆட்டமும், பாட்டமும், கள்ளும்,
இறைச்சியும் உண்டு நடத்திக் கொண்டாடி விட்டு இரவு
எட்டு மணிக்குள்ளாக திரும்பிப் பார்க்காது ஜனங்கள் திரும்பி
வேகவேகமாய் நடந்து வந்து கோயிலில் கும்பிட்டு வீடு
சேர்வார்கள். அப்படிச் சேர்பவர்கள் அன்றிரவு முழுக்க
வெளியே வராதிருப்பார்கள். பைடிதல்லி தேவியும், அவளின்
காதலனும் முநிகள் புடை சூழ ஊரில் திரிவார்கள் என்பதால்
அவர்களுக்கு இனிய சங்கீதங்களையும், மந்திரங்களையும்
உச்சரித்து இரவு முழுக்க சாக்கல்யர்களே மயானத்தில்
இருப்பார்கள். இவ்விழா முடியும்வரை இது தொடரும். ஒரு
காலக்கட்டத்தில் சக்கலியர்களிடமிருந்து தெய்வத்தை அழைத்துப்
போய் பிரதிஷ்டை செய்யாதிருந்தால் என்ன நாமே செய்து
கொள்ளலாம் என்று தெலுதேனுகேரு என்று அழைக்கப்படும்
ஆந்திர ராஜிக்கள் முற்பட்டபோது சீதபேதியும், கொள்ளை
நோயும் ஊரில் கண்டு மக்கள் அல்லோலகல்லோலப்பட்டார்கள்.
பின்னர் மன்னிப்புக் கேட்க அம்மன் சீற்றம் தணிந்தது என்றும்
இன்னும் அந்த வழக்கம் தொடர்கிறது. இதை எனது ஊரின்
பெரியவர்களும், வயதுக்கு வந்தவர்களும் இன்றும் சொல்லிக்
கொண்டிருக்கிறார்கள். இது இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது.
‘நாம் மாட்டுக்கறியும், வேற சாங்கயங்களையும் பின்பற்றியதால்
நமது தம்பி நம்மை விட்டுப் பிரிந்து போய்விட்டான். ஆனாலும்
இந்த ஒரு விழாவின்போது மட்டும் நமது இருவருக்கும் தாயான
பைடிதல்லியின் வேண்டுகோளுக்கு இணங்க இருவரும் சேர்ந்து
இவ்விழாவைக் கொண்டாடுகிறோம். அந்த விழாவின்போது
மீனும், மாட்டிறைச்சியும், கட்டக்காலு வாருலும் (கட்டக்காலு
வாருலு என்பது பன்றியின் தோலும், கொழுப்பும் சிறு
சிறு கயிறுகளைப் போல் வார்த்து எடுக்கப்பட்டது என்ற
பொருளுடையது) சமைத்து காகங்களுக்கும்,
என் ஊரில் இரக்கும் எந்தப் பாட்டனுக்கும் இந்த சோறு
பாட்டோடு பாடி உரைக்கத் தெரியும். இவ்வெல்லாவற்றிற்கும்
மேலாக ஒரு சிறு விசயத்தையும் சொல்ல வேண்டும். இந்த
சாங்கயங்கள் அனைத்தின் போதும் மாலாடு மட்டும் சேர்த்துக்
கொள்ளப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தகுந்த உண்மை.
குலபங்கம் செய்த பாவத்திற்கான தண்டனையோ அது என்றார்
கொண்ட தொட்டியா-.
இவ்வாறு சத்திரியர்களாக இருக்கும் ‘பைடிதல்லிவாரு’
(எனது சொந்தக்குலம்) ராஜிலுகளாக இருக்க, அவர்கள்
சக்கலியர்கள் என்றும், மாதிகர்கள் என்றும் அழைக்கப்படுவது
ஏனென்றால் கொண்ட தொட்டியா சொன்ன ‘நமது தெய்வம்
வேறு, தம்பியின் தெய்வம் வேறு. அவனது சாங்கியம் வேறு,
நமது சாங்கியம் வேறு’ என்பது தான். அதாவது சத்திரியர்களாக
இருந்தும் பௌத்தத்தைப் பின்பற்றியதால் தாழ்த்தப்பட்டதும்,
பார்ப்பனிய தலைமையைப் பின்பற்றியதால் ராஜிலுகள்
இன்னும் தங்களைச் சத்திரியர்கள் என்று சொல்லிக் கொண்டு
உண்பன, கொள்வன (இந்த ஒரு குறிப்பிட்ட விழா நாட்கள்
தவிர்த்து) தவிர்த்து வருவது காணும்போது, பௌத்தத்தை
எவ்வளவு மூர்க்கமாக பார்ப்பனியம் வீழ்த்தியிருக்கிறது என்பது
விளங்கும். ராஜிலுகளை அழிக்கும் பரசுராமனை வணங்கும்
ரத்தவெறியர்கள் அல்லவா அவர்கள்.
அதே போல் பங்காருவாருலு என்றும் சிலர்
அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் ஏன் அவ்வாறு
அழைக்கப்படுகிறார்கள் என்றால், பொன் செய்யும் பணியைச்
செய்யும் சக்கலியர்கள் அவர்கள். ‘பைடி’ என்ற சொல்லும்,
‘பொன்’ என்ற அர்த்தமுடையதுதான். அதே சமயத்தில் ‘பைடி’
என்ற சொல், ‘ஒருபடி’ என்ற அளவீட்டையும் குறிக்கும். (‘நாழி’
என்பதற்குச் சமம் ‘படி’ என்பது. நாழி என்பது பாலிச் சொல்
என்பதை லிஷீஸீபீஷீஸீ றிணீறீவீtமீஜ்t ஷிஷீநீவீமீtஹ்ன் அகராதியில் கண்டுகொள்க)
இவ்வாறு தெய்வக் குறிப்பும், தொழிற்குறிப்பும் பைடி குற்றியவர்கள்
எனும் பௌத்தத் துறவிகளின் வழித்தோன்றல்களையும் குறிக்கும்
சொல்லாக, குலங்களின் அடையாளமாக இது இருக்கிறது.
இவர்கள் பௌத்தத்தைப் பின்பற்றியதாலேயே பொன் செய்யும்
பணியிலிருந்து முடக்கப்பட்டார்கள். விஷ்வகர்மாக்கள்
இதை எடுத்துக் கொண்டார்கள். ஆனாலும் என்ன வரலாறு
மறைவதில்லை. அந்த வரலாறாய் வாழும் எமது மக்கள்
‘பங்காருவாருலு’ என்று இன்றும் இருப்பதிலிருந்தே அது
விளங்குகிறது.
ஏற்கனவே நான் போதிவாரு, மங்கவாரு, தாசரி, ஜானவாரு
போன்றோரின் பணிகளையும், வாழ்க்கை முறைகளையும்
பற்றி எம் மக்கள் கூறியதை எடுத்துக் கூறி இருக்கிறேன்.
‘கூலவாரு’ என்பதற்கு தானியங்களைக் கொண்டு வியாபாரம்
செய்பவர்கள் என்று அர்த்தம். அவர்களே ‘செட்டிசெலவாரு’
என்றும் அழைக்கப்பட்டார்கள். செட்டிசெலவாரு என்பது
பலசரக்குகளைக் கொடுத்தும், வாங்கியும் செய்யும் பணியைக்
குறிக்கும் சொல். ‘செட்டி’ என்ற பாலிச் சொல்லிற்கு ‘ணிஜ்நீலீணீஸீரீமீ’
என்று அர்த்தம். பார்ப்பனக் கருத்தியலை ஏற்றுக் கொண்ட
வியாபாரமும் செய்தவர்கள் ஆரிய, வைசிய செட்டியார்கள்
என்று சாதி முத்திரைப் பெற்றார்கள். பௌத்தர்களாக இருந்து
பலவிதமான பண்டங்களை ‘கொள்வதும், மிகை கொளாது
கொடுப்பதும், குறை கொடாது’ என்று பரிவர்த்தனை
செய்தவர்கள் தங்கள் தொழிலில் முடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு,
தீண்டத்தகாதாராக்கப்பட்டு வறியவர்களாயும், ஏழைகளாயும்
வலிமையிழந்து வாழ்க்கை சுகாதாரமற்றுப் போனார்கள்.
வியாபாரம் போயிற்று, ‘செட்டிசெலவாரு’ எனும் சொல்
மட்டும் மிஞ்சியது. விடுதலை தரும் வரலாற்றை மீட்டும்,
மீட்டும், மீட்டும் அந்தச் சொல் இனிது. பொருள் இனிது. எமது
குலத்தவருக்கு ‘பைடிதல்லிவாருலு’க்கு முறைக்காரரான
அவர்கள் இனியவர்கள்; அவர்கள் என் முறைப் பெண்கள்;
அழகிகள். அவர்கள் விழிக்கட்டும், அவர்கள் செழிக்கட்டும்.
உலகுக்கெல்லாம் சொல்லட்டும் தம்மைக் கீழ்ப்படுத்தி ஒற்றை
வரையறைக்குள் வரையறுப்பவர்களின் செவிட்டில் அறையும்படி
‘செட்டிசெலவாரு’ எனும் சொல் ஓங்கி ஒலிக்கட்டும்.
பந்திவாரு பற்றி ஏற்கனவே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
திருதராஷ்டிரனைப் போல பறைக்குருடால் பாதிக்கப்பட்டுப்
பறையர்களுக்கே நாடும், நலனும் வேண்டி பாடுபட்டிருந்தாலும்,
அயோத்திதாசப் பண்டிதர், ‘பந்திவாரு’ என்பவர்கள் பன்றி
நாட்டை ஆண்ட ராஜாக்கள் என்றும், அவர்கள் புத்தர்
தமது தம்மத்தைப் பரப்ப 16000 பௌத்தமித்திரர்களோடு
தட்சினபாரதத்திற்கு விஜயம் செய்தபோது ‘கண்டலு கூடு’
அதாவது (‘கண்ட’ என்ற தெலுகுச் சொல்லுக்கு கொழுவிய
இறைச்சி என்று பொருள்) இறைச்சியும், சோறும் பொங்கி,
பெருஞ்சோறு கொடுத்து தம்மம் பரப்ப உதவினார்கள் என்றும்
தம்மத்தைப் பன்றி நாட்டில் முழுவதும் பரப்பி சீரும், சிறப்பும்
பெற்றவர்கள் என்றும் எழுதியிருக்கிறார். ஆனால் அந்த
‘பந்திவாருலு’ எமது மக்கள் எனும் உண்மை தெரிந்திருந்தும்
சொல்லாமல் ‘வாளா’ இருந்து விட்டார்.
வளையல் வியாபாரம் செய்தவரை ‘காஜலுவாரு’ என்றும்
பெருந்தோணிகளை வைத்துக் கடல் தாண்டி வியாபாரம்
செய்தவர்களை ‘ஓடவாருலு’ என்றும், ‘மாசாத்துலு’ என்றும்
(ஓக்கூர் மாசாத்தியார்: தன் காதலன் லிணீஹ் ஙிuபீபீலீவீst அவன் இவ்வூரன்
அல்ல. எனவே வெல்லக்கூடாது என்று ஊரின் ஒரு பிரிவும்
மற்றவர்கள் அவன் வெல்ல வேண்டும் என்று இன்னொரு பக்கமும்
நின்று தமக்குள் சண்டை போட்டுக் கொண்டார்கள். ஆனால்
நானோ பருத்த அடிப்பனையின் மீதேறி நின்று என் காதலன்
வென்றதைக் கண்டேன் என்ற சுவைமிக்க காதல் பாட்டைப்
பாடியவள்) கண்ணகி இப்படிப்பட்ட ஒரு மாசாத்துவனின்
மகள்தான். அவள் மாதிகத்தி எனும் மாசாத்திதான்!
இங்ஙனமே ‘சேனுசெட்டுலுவாரு’ எனும் பெயர் எமது
மக்கள் சேனு=நிலம் செட்டு (‘சிலீணீஜீtமீக்ஷீ’ என்பதில் வரும் ‘சிலீ’
போன்று உச்சரிக்கப்பட வேண்டும் இந்தச் சொல்) என்றால்
தோப்பு, மரக்கூட்டம் என்று அர்த்தம். அதாவது நிலனும்,
புலனும், தோட்டமும், தொரப்பும் வைத்து வாழ்ந்த இல்லறம்
எனும் நல்லறம் பேணிய லிணீஹ் ஙிuபீபீலீவீst என்பதை அறிக.
நிலனும், புலனும் கொண்டு வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல்
பல நூல்களும் பல மொழிகளும் கற்று சமஸ்கிருதம், பாலி, தெலுகு
போன்ற மொழிகளில் பண்டித்தியம் மிக்கவர்களாகவும், சிறந்த
மருத்தவர்களாகவும் எமது குலத்தோர் இருந்து வந்துள்ளனர்.
எனது பாட்டிக்கு 16 பிள்ளைகளுள் மூத்தப் பிள்ளையாய்
உதித்த அய்யாவு கவிராயர் பற்றித் தெரியாதவர்களே
அம்மம்பாளையத்தில் இல்லை என்பது ஓர் எடுத்துக்காட்டாகும்.
இன்னும் இப்படி எத்தனையோ எமது குலங்களைச்
சேர்ந்தவர்கள் அறிவு ஜீவிகளாய் பௌத்தம் வளர்த்தவர்கள்
என்பதை ‘சூதலுவாரு’ என்ற சொல்லும், ‘வைபுளவாதுலு’ எனும்
சொல்லும், ‘வெலுநாட்டிலுவாரு’ என்ற சொல்லும், ‘கவிஜமாவுலு’
(‘ஜமாவுலு’ எனும் தெலுகுச் சொல்லுக்குக் கூட்டம் என்று
அர்த்தம்) என்பதும் ‘பிட்டகலுவாரு’ என்பதும், ‘ராமஜல்லிவாரு’
என்பதும் ஓங்கி எம்மோடு வழங்கி வருவதினின்று அறியக்
கிடக்கிறது.
மலை எருதுகளை அடக்கி, வேட்டையாடி, பழக்கிக்
கொண்டு வருபவர்களாக கொல்லிமலை, பவளமலை, ஏழமலை,
செங்கல்வராயன்மலை, பச்சை மலை, நைனா மலை என்று
சேலம், நாமக்கள், சின்ன சேலம், கரூர், ஆத்தூர், திண்டுக்கல்
பக்கம் உள்ள மக்களுள் ஒரு சாராரை ‘கொண்டெத்துலுவாரு’
‘கொண்ட=மலை, எத்து=எருதுகள், மலைஎருதுகள் என்று
அர்த்தம்) என்றும் ஆடுமாடுகளை பட்டி, பட்டியாய் கிடை
போட்டு அவைகளைச் சொத்தாகக் கொண்டு ஊர், ஊராக
இன்றும் திரியும் எமது இனத்தாரில் ஒரு சாரார் ‘கொல்லமாதிகலு’
என்றும் (‘கொல்ல’ என்பதை ‘ரீஷீ’ என்ற ஆங்கில வார்த்தையை
உச்சரிப்பதுபோல உச்சரிக்க வேண்டும்) அறியப்படுகிறார்கள்.
ஆக, இப்படிப்பட்ட எந்த உண்மைகளையும் அறியாமல்,
எங்களை அண்டாமல், எங்களிடம் என்னதான் நிலவி வருகிறது
என்றுகூட தெரிந்து கொள்ளும் குறைந்தபட்ச ஆராய்ச்சி
நேர்மையும், ஆர்வமும் இல்லாது சக்கலியர்கள் மலம் அள்ள
அழைத்து அல்லது இழுத்து வரப்பட்டார்கள் என்பது எவ்வளவு
அயோக்கியத்தனமானது என்பது சொல்லினால்தான் விளங்கும்.
அதனால்தான் சொல்லுகிறோம், கதைக்கிறோம், அலறுகிறோம்.
சக்கலியன் என்ற சொல்லின் மூலச் சொல் ‘சாக்கியா’
என்பதுதான். பாலி மொழியில் கூட ‘பற’ என்பது அன்னியமானது
என்றுதான் குறிக்கிறது. ஆனால் ‘பறையர்’ என்ற சொல்லும்
‘சாக்கிய’ என்ற சொல்லும் ஒன்றைக் குறிக்-கும் இரண்டு சொற்கள்
என்று பேசுபவர்களுக்கு ஏன் ‘சக்கலியன்’, ‘சாக்கியன்’ என்ற
சொற்கள் ஒரு குடும்பத்து, ஒரு குலத்து, ஒரு கூட்டத்துச் சொற்கள்
என்பது விளங்கமாட்டேன் என்கிறது என்பதுதான் எனக்குப்
புரியவில்லை. ‘தமிழ் மூலம்’ என்று முக்கிக் கொண்டிக்கும் தமிழ்
மூலவர்கள் கொஞ்சம் மூளை உழைப்புச் செய்தால் ‘சிந்தித்தல்’
என்ற சொல்லைக் கூட ‘சிந்தித்தி’ எனும் பாலிச் சொல் என்ற
உண்மையை அறியக் கூடும். அங்ஙனமே ‘கதளி’ என்ற சொல்லும்
‘சின்னாபின்னம்’ என்ற சொல்லும் (‘சின்னா’=சிலீவீமீயீ என்பதில்
உள்ள ‘சிலீவீ’ போல் உச்சரிக்கப்பட வேண்டும், ‘பின்னம்’ = ஙிவீலீணீக்ஷீ இல்
உள்ள ‘ஙிவீ’ போல் உச்சரிக்கப்பட வேண்டும்) பாலியிலுள்ளனவே.
‘சக்கலியா’ என்ற பாலிச் சொல்லுக்கு ஜிலீமீ ணீநீலீவீமீஸ்மீக்ஷீ / ஷீஸீமீ ஷ்லீஷீ வீs
நீணீஜீணீதீறீமீ என்று அர்த்தம். ‘சாக்கியா’ என்ற சொலுக்கு tலீமீ ‘னீஷீக்ஷீமீ’
னீணீஸீ & மாமனிதன் என்று அர்த்தம். (மா=அதிகம், கல்விமான்,
ஈகைமான் என்ற சிறப்பு விகுதி என்று பாலியில் உள்ளது)
ஆக ஷிணீளீஹ்ணீ = மா + அதிக + மான் = மாதிதமான் =
மாதிகமான்
அல்லது ஷிணீளீஹ்ணீ = மா + அதிகம் ‘னீஷீக்ஷீமீ’ னீணீஸீ = அதிகன் என்று
சுருக்கம் பெற்று ஷிணீளீஹ்ணீ = மாதிகன்
ஜிலீமீ ‘னீஷீக்ஷீமீ’ னீணீஸீ என்பது ஷீஸீமீ ஷ்லீஷீ வீs னீஷீக்ஷீமீ நீணீஜீணீதீறீமீ என்ற அர்த்தம்
தரும் சக்கலியாவோடு அர்த்த ஒருமிப்பு உருவாவதையும்
சக்கலியர்கள், ‘சாக்கையர்கள்’ என்றும், ‘மாதிகாக்கள்’ என்றும்
அழைக்கப்படுவதிலிருந்து அவர்கள் ‘சாக்கியர்கள்’ என்பது
தெற்றென விளங்குகிறது. (இவ்விளக்கத்திற்கு ரிஷ் நேவிஸின்
ஷிணீளீஹ்ணீ என்ற நூலைக் கண்ணுறுக) அவர்கள் ‘பிராமணன்’
என்ற சொல்லை எப்படி ஒரு கொள்கை, ஓர் அடையாளச்
சொல்லாக பௌத்தம் எதிர்த்த மத அடிப்படைவாதிகள் கைக்
கொண்டார்களோ அதைப் போலவே ‘சக்கலியா/சாக்கியா’
என்ற சொல்லும் பௌத்தர்களைக் குறிக்கும் ஒரு ரீமீஸீமீக்ஷீவீநீ (அது
ரீமீஸீமீணீஷீறீஷீரீவீநீணீறீஆக இருந்த போதும் சக்கலியர்களைப் பொறுத்தவரை)
சொல்லாயிருக்கிறது. பலமும், அறிவு தீர்க்கமுமுள்ள ஒருவனை
சாக்கிய சிம்ஹடுரா என்று சொல்வது எம் சொல் வழக்கு. சாக்கிய
சிம்ஹரு என்ற புத்தரைக் குறிக்கும் சொல் என்பது சொல்லாமல்
விளங்கும். பார்ப்பனியத்தைச் சுயநல நோக்கோடு சுவீகரித்துக்
கொண்டவர்கள் இருக்கிறார்கள். பார்ப்பனர்கள் சாக்கிய
சிராமணர்களுக்கு எதிராக மறைந்து கரைந்து யுத்த தர்மங்களை
உதாசீனம் செய்து நடத்தும் மாயாஜாலம் மிக்க கொலைகாரக்
கலகங்களின் கொள்ளையில் கிடைக்கும் அவிர்பாகத்திற்காக.
அதனால்தானோ என்னவோ பறையர்களுக்குள்ளோ எம்முள்
உள்ளதைப் போன்ற குலங்களும், கோத்திரங்களும் கிடையாது.
அதே போல பிராமணன் என்று சொல்லிக் கொள்ளத்
துடிக்கும் ஆனால் சொல்லிக் கொள்ள முடியாதிருக்கும்
மற்ற சாதிகளைப் பாருங்கள். குங்குமப் பொட்டுக் கவுண்டர்
கூட்டம், பெரிய கவுண்டர் கூட்டம், சின்னமணியன் கூட்டம்,
நரம்புகூட்டு கவுண்டர், வரப்பு கட்டும் கவுண்டர், தக்காளிக்
கவுண்டர் என்றுதான் பிரிவுகள் இருக்கின்றன. இவற்றிற்குப் பின்
பெரிதாக ஏதொரு வரலாறும் இல்லை என்பது மேற்சொன்ன
சொற்களாலே விளங்கும். வெகு சுவாரசியமான ஓர் உண்மையும்
உண்டு: அது ‘கவுண்டன்’ என்ற சொல் தமிழ்ச் சொல் இல்லை
என்பதுதான். நாடோடிகளாக வந்த கொடாக்களான (ரீஷீஷ்பீணீ)
இவர்கள் கொங்கு தேசத்திலிருந்து கொங்கு மாதிகர்களைப்
பார்த்துத் தங்களையும் கொங்குக் கவுண்டர்கள் என்று அழைத்துக்
கொண்டார்கள். கொங்கு மாதிகர்கள் வெள்ளாமை செய்வதைப்
பார்த்துத் தாங்களும் வெள்ளாமை செய்ய முற்பட்டார்கள்.
‘கவுண்டம்‘ என்ற சொல் ‘கௌண்டன்யம்’ என்றும் ‘கோமியம்’
என்றும் வழங்கும் சமஸ்கிருதச் சொல். மாட்டின் சாணி
என்று அர்தம். வெட்கம் கெட்ட பார்ப்பனர்கள் மாட்டின்
சாணியிலிருந்து உதித்த ரிஷியின் பெயரை கௌண்டன்ய ரிஷி
என்றும், தம்மைக் கௌண்டன்ய ரிஷி குலத்தார்கள் என்றும்
சொல்லிக் கொள்ள, பார்ப்பனக் கருத்தியல் வேண்டி சுவீகரித்துக்
கொண்ட இந்நாடோடிகளும், அதன் அர்த்தம் இன்னதென்று
அறியாமலேயே தங்களைக் கவுண்டர்கள் என்று அழைத்துக்
கொள்வாராயினர்.
அப்படியே தேவர்கள் என்பவர்கள் திருடர்கள் என்பதும்,
கள்ளர்கள் என்பதும் குற்றப்பரம்பரையினராய் நேற்று
வரை போலீசு ஸ்டேசனுக்குச் சென்று கைநாட்டு வைத்துக்
கொண்டிருந்தவர்கள் என்பதும், நாமறியக் கிடக்கும் உண்மை.
இவர்களை ‘கள்ளம் காசேவாரு கொத்து கோசேவாரு மதுரசீரடு’
கள்ளம் செய்பவர்களின் கழுத்தை அறுக்கும் வீரன் மதுரை வீரன்
என்று எம் மக்களூடே வழங்கி வரும் பாடலினின்று இவர்கள்
கள்ளம் காய்ப்பவர்கள் (கள்ளம் காசேவாரு) என்பது தெளிவு.
ஆக வீரம் மிக்க, போரிடும் பரம்பரையினரான சத்திரியரான
சாக்கியர்கள்பௌத்தம்பரப்பும்பொருட்டுஅநாதிகாலந்தொட்டே
இந்தியா முழுமைக்கும் விரவி இருந்தார்கள் என்பது அறிந்தும்,
அதை மூடி மறைத்து அவர்களை இழிவுபடுத்தும் பொருட்டு
அவர்கள் செருப்புத் தைப்பவர்கள், துப்புரவு செய்பவர்கள் என்று
கதை கட்டுகிறவர்களின் நிர்மூடத்தன்மையை என்னவென்பது.
எந்தவொரு தொழிலையும், வேறொருவரும் செய்ய
நேர்வதை அவரவர் தனிப்பட்ட அறிவும், திறமையும்,
சந்தர்ப்ப சூழ்நிலைகளும்தான் பெரும் காரணிகளாக நின்று
தீர்மானிக்கின்றன என்பதை அறிவுபூர்வமாக சிந்தித்து ஏற்றுக்
கொள்ளாமல் “இவர்கள் இதுதான்” என்று முத்திரை குத்துவதன்
அரசியல் என்ன என்பதை யாம் அறிவோம். எனவேதான்
“நான் இதுதான்” என்ற அரசியலையும், “நான் இதுவல்ல” என்ற
தத்துவத்தையும் முன் வைத்து இன்று சக்கலியப் பெருமகன்கள்
எழுகிறார்கள். படையும், பரிவாரங்களும் இழந்து நிற்கும்
மன்னன் தன்னை மன்னனென்று சொல்வது அம்பலத்தில்
விலை போகாது. அதனால்தான் வாளோடும், வரலாற்றோடும்
எழுகிறது எமது இனம்.
இங்ஙனம் பல்வேறு தொழில்களைச் செய்தும், சிறப்புற்றும்,
குடியோச்சியும், அரசும், சங்கமும் நிறுவி பௌத்தம் எனும்
சிராமண மரபை வளர்த்தெடுத்ததனாலேயே சக்கலியர்கள்
ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, நொறுக்கப்பட்டவர்களாக
(தலித்) ஆக்கப்பட்டார்கள். இழிவும், பழிப்பும் ஏற்றிய பணிகளைச்
செய்யும்படி வற்புறுத்தப்பட்டார்கள்.
ஸ்ரீலங்காவிலும் சாக்கியர்கள் மிக இழிவானதாகக் கருதப்படும்
துப்புரவுப் பணியைச் செய்யும்படி நேர்ந்திருக்கிறது என்றாலும்,
சிங்களர்களும் ‘சாக்கியர்களே சக்கலியர்கள்’ எனும் வரலாற்று
உண்மையை உணராது இருக்கிறார்கள் என்பதும் ஒருபுறம் இருக்க,
ஆனாலும் “தொடாதே, தீண்டாதே” என்று எவரொருவரையும்
கூறுவாராய் இல்லாதிருப்பதிலிருந்தே தெரிகிறது, அவர்கள்
தொழில்களிடையே வித்தியாசம் பார்க்காமல் தொழில் சார்ந்து
வாழும் அந்தஸ்து வித்தியாசம் பார்க்கிறவர்கள் என்பது. ஆனால்
“தீண்டத்தகாதவன், தாழ்த்தப்பட்டவன்” என்று பௌத்தனை
விரட்டுவதும், கழுவிலேற்றுவதும், மாதிகப் பள்ளிகளை எரிப்பதும்,
மாதிகப் போதகர்களைக் கொல்வதும்தான் வைதிகத்தை ஏற்றுக்
கொண்ட வெறியர்களின் செயல்பாடாக இருக்கிறது.
எமக்கு ‘பங்காருவாரு’ என்ற சொல் மட்டும் எஞ்சியது;
‘பொன்’ தான் இல்லை; ‘பந்திவாரு’ என்ற சொல்தான்
இருக்கிறது; பன்றி நாடும் அய்யனாம் சக்கலியப் பெருமாளின்
வராகத் திருஅவதாரத்தை உரிமை கொண்டாடும்படியான
வழிதான் இல்லை. ‘செட்டிசெலவாரு’ எனும் சொல்தான் எஞ்
சியது. வியாபாரம்தான் இல்லை. ‘போதிவாரு’ என்ற சொல்தான்
எஞ்சியது, ‘பௌத்தமும், சங்கமும்’ இல்லை. பாலிவாரு என்ற
சொல்தான் எஞ்சியது, ஆசிய மொழிகளின் ஆதியும், அந்தமுமற்ற
தந்தையும், தாயுமான ‘பாலி’யெனும் அருமந்த மொழிதான்
இல்லை. ‘பைடிதல்லிவாரு’ எனும் சொல் மட்டும் எஞ்சியது,
குடியும், அரசும் இல்லை. இவ்வாறாக அதல பாதாளத்திற்கு
அழுத்தப்பட்டவர்களாய் சக்கலியர்கள் கிடக்கிறார்கள்;
சாக்கியர்கள், பௌத்தர்கள் என்ற இரு காரணத்தினாலேயே.
இவ்வாறு குலங்கள் மட்டும் தொக்கி எஞ்சியிருக்க கொண்ட
பௌத்த கொள்கையும், தொழில்களும், அரசும், வாழ்வும்
இல்லாதொழியும்படி ஒழிக்கப்பட்டிருப்பதை எமது சாக்கிய
குலக்கொழுந்துகள் கண்ணுற்று,
‘விழி மட்டும் இருக்குதிங்கே ஒளிதான் எங்கே?
குளம் மட்டும் இருக்குதிங்கே குமுதம்தான் எங்கே?
கடை கண்டான் சாக்கல்யன், பொருள்தான் எங்கே?
என்று புதையுண்ட வரலாற்றை மீட்டழைத்து வரும் குரல்
புதையுண்டு போன விஹாரைகளில் பட்டு மீண்டொலிக்கிறது.
புதையுண்ட கடவுளான எமது சக்கலியப் பெருமானார் கல்லாலி
மரத்தடி போதியானார், மீட்டும் எழுகிறார். கணக்குத் தீர்க்க
வரும் அவரின் சந்ததிகளுக்குப் பார்ப்பனர்களும் அவர்தம் ‘சதுர்
வண்ண’ மயக்கில் சிக்கிக் கிடக்கும் நிர்மூடக் கூட்டங்களும்
அண்ணன் சற்றே இளைத்தால் அண்ணன் பொண்டாட்டி
தனக்கு அரைப் பொண்டாட்டி என்று சாக்கியரின் வரலாற்றை
மறைத்துவரும் பறையர்களும் பதில் சொல்லியே தீர வேண்டும்.
எழுகிறார்கள் எமது மக்கள்.
ஆக, நாங்கள் உள்ளம், உடல், வாக்கு ஆகியவற்றின்
மலங்களை எரிக்கும் அவலோகித பெருமானாம் அமலனின் வழி
போற்றும் அமலச்சாதி என்று அறிக; எந்தவொரு அழுக்கும்,
கசடும் அற்ற நிர்மலனின் வழி தோன்றிய நிர்மலசாத்துகள்
என்றறிக. மனிதர் நோக மனிதர் பார்க்கும் வழக்கொழிந்து
போக, கண்ணின் கருணை ததும்பி எவ்வுயிருக்கும் தீங்கு
செய்யாதிருங்கோள், தம்மம் கடைப்பிடியுங்கோள், அதம்மம்
கடைப்பிடியாதிருங்கோள் என்று நான்கு மறை போதித்த போதி
மாதிகப் பெருமாளாம் தாமரைக் கண்ணனான கமலனின் வழித்
தோன்றிய கமலச்சாதிகள் என்பதை அறிக.
இப்படியான அமலசாக்கியர்களை, நிர்மல சாக்கியர்களை,
கமலச்சாக்கியர்களை இழிவுபடுத்தி மலம் அள்ளும் விதியாகவும்,
எமது அவலோஹிதப் பெருமாளைப் புதையுண்ட சாமியாகவும்
ஆக்கிய வன்கொடுமைக்கு முடிவு கட்ட எமது மக்கள்
எழுகிறார்கள். சாக்கிய சிம்ஹமே சொல்லினை எடடா, பௌத்தச்
சொல்லினை எடடா; இந்தப் புல்லியர் மந்தமதியினை பூழ்த்தி
செய்திட என்றே யாம் சக்கிலியர்களுக்கும், பௌத்தத்தின்பால்
காதல் மிக்க அன்பர்களுக்கும் வேண்டுகோள் விடுகிறோம்.

- புத்தமித்திரன்

No comments:

Post a Comment